எது பெருசுனு அடிச்சு காட்டு…. கடும் மோதலில் ரஜினி, விஜய் படங்கள்.. தீராத கழுகு காக்கா பிரச்சனை…!

சினிமா உருவான காலகட்டத்திலிருந்து முன்னணி கதாநாயகர்களுக்குள் கடும் போட்டி நிலவுவது வழக்கமான ஒன்று. எம்ஜிஆர், சிவாஜியில் தொடங்கி தற்போது விஜய் சேதுபதி சிவகார்த்திகேயன் வரை அந்த போட்டி நீண்டு கொண்டிருக்கிறது. அதில் நடிகர்களை விட ரசிகர்கள் தான் அதிகம் மோதிக் கொள்வார்கள்.

அந்த வகையில், ரஜினிகாந்த், கமலஹாசன் திரைப்படங்கள் வெளிவரும் போது ரசிகர்கள் அடித்துக் கொண்ட காலம் முடிந்து விட்டது. இருவரும் அவரவர் பாணியில் படங்களை தேர்ந்தெடுத்து பிஸியாக நடித்துக்கொண்டிருக்கிறார்கள். தற்போது ரஜினிகாந்திற்கும் விஜய்க்குமான மோதல் தான் மறைமுகமாக நடந்து கொண்டிருக்கிறது.

   

இளம் கதாநாயகனாக கமலுடன் போட்டியிட்ட ரஜினி, தற்போது விஜய்யுடன் போட்டியிட்டுக் கொண்டிருக்கிறார். விஜய் தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என்று பலரும் கூறுவதை ரஜினியால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த பட்டத்தை அவர் விட்டுக் கொடுப்பதாக இல்லை. ஜெயிலர் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் மறைமுகமாக ரஜினி, விஜய்யை தாக்கி காக்கா கழுகு கதையை கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

எனினும் விஜய் அமைதியாக லியோ திரைப்படத்தின் வெற்றி விழாவில் சூப்பர் ஸ்டார் என்றால் அது ஒருவர் தான் என்று கூறிவிட்டார். அதன் பிறகு இருவரும் அவரவர் திரைப்படங்களில் பிஸியாகி விட்டனர்.

இந்நிலையில், ரஜினிகாந்தின் வேட்டையன் திரைப்படமும், விஜய்யின் கோட் திரைப்படமும் ஒரே தேதியில் வெளியாக உள்ளதாக கூறப்பட்டிருக்கிறது. இதில் யார் உண்மையான சூப்பர் ஸ்டார் ?என்று பார்த்துவிடலாம் என்று இருவரும் முடிவு எடுத்து விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.