மாடர்ன் ட்ரெஸில் போஸ் கொடுத்துள்ள நடிகை ரகுல் ப்ரீத் சிங்…. ரசிகர்களை கவரும் லேட்டஸ்ட் புகைப்படங்கள்..

தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் பிஸியாக நடித்து வருபவர் தான் நடிகை ரகுல் ப்ரீத் சிங். தமிழில் கெளதம் கார்த்திக்கு ஜோடியாக 2014 – இல் வெளியான படம்தான் ‘என்னமோ ஏதோ’ திரைப்படம். அந்த படத்தில்தான் அவர் முதல் முறையாக திரைத்துறைக்கு அறிமுகமாகிறார்.

   

மேலும், இந்த படத்திற்கு பின் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக நடித்த ‘தீரன் அதிகாரம் ஒன்று’ மிகப்பெரிய வெற்றி பெற்றது. மேலும் தெலுங்கில் அவர் நடித்த மன்மதுடு-2வும் தோல்வியடைந்து விட்டது.அதனால் ரகுல் பிரீத் சிங்கிற்கு ஹிந்தியில் புதிய படங்கள் கிடைக்க தற்போது மும்பையில் குடியேறியிருக்கிறார். மற்ற நடிகைகளை போலவே சமூகவலைத்தள பக்கங்களில் மிகவும் ஆக்ட்டிவாக வலம் வர கூடியவர் இவர் என்று தான் சொல்ல வேண்டும்.

இப்போது அயலான் மற்றும் இந்தியன்2 என்ற இரண்டு படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். இந்நிலையில் தற்போது தன்னுடைய மாடர்ன் ட்ரெஸ்ஸில் போஸ் கொடுத்து தனது ரசிகர்களை சூடேற்றியுளார் இவர் என்று தான் சொல்ல வேண்டும்…