குடும்பத்துடன் பிறந்த நாளை வேற லெவலில் கொண்டாடிய Sandy மாஸ்டர் மனைவி… வெளியான அழகிய புகைப்படங்கள்..

தமிழ் சினிமாவில் தற்போது பிரபலமான ஒரு நடன இயக்குனராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் Sandy மாஸ்டர்.

   

இவர் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு இரண்டாவது இடத்தை பிடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களின் படங்களில் நடன இயக்குனராக பணியாற்றியுள்ளார்.

இவர் நடன இயக்குனராக மட்டுமல்லாமல் 3:33 என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர்.

இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. இவர் முதலில் நடிகை காஜல் பசுபதியை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் அதன் பிறகு இருவரும் விவாகரத்து செய்து பிரிந்தனர்.

பின்னர் சாண்டி மாஸ்டர் கடந்த 2017 ஆம் ஆண்டு Dorathy Sylviaஎன்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் தற்போது இந்த தம்பதிக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளன.

அவரின் மூத்த மகள் லாலாவை ரசிகர்கள் அனைவரும் அறிந்திருப்பீர்கள். சாண்டி மாஸ்டர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது அவரின் மகள் லாலா பிக் பாஸ் வீட்டிற்குள் வருகை தந்து அனைவரையும் மகிழ வைத்தார்.

அப்போது குட்டி பெண்ணாக இருந்த சாந்தியின் மகள் தற்போது நன்றாக வளர்ந்து விட்டார்.

இதனிடையே இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வரும் சாண்டி மாஸ்டர் தனது வீட்டில் நடைபெறும் விசேஷங்கள் குறித்த புகைப்படங்களை அடிக்கடி பகிர்வது வழக்கம்.

இந்நிலையில் டான்ஸ் மாஸ்டர் Sandy-யின் மனைவி நேற்று தனது பிறந்த நாளை நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் கொண்டாடிய நிலையில் அவரின் பிறந்தநாள் கொண்டாட்ட தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.