
பிரபல நடிகரான விஜய் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் வி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். விஜய்க்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. சினிமாவில் வளர்ந்து வந்த காலகட்டத்தில் பூவே உனக்காக படம் விஜய்க்கு நல்ல திருப்புமுனையாக அமைந்தது.
இந்த படத்தில் சங்கீதா அவருக்கு ஜோடியாக நடித்தார். அந்த படம் சூப்பர் ஹிட் ஆனது. அந்த காலகட்டத்தில் விஜய் அளித்த ஒரு பேட்டியில் எனக்கு சங்கீதா மிகவும் பிடிக்கும் என கூறியிருந்தார். விஜயின் மனைவி பெயரும் சங்கீதா என்பதால் குழப்பமான செய்திகள் ஊடகத்தில் வலம் வந்தது.
இது பற்றி சமீபத்தில் நடிகை சங்கீதா அளித்த பேட்டியில் கூறியதாவது, எனக்கு யாருடன் திருமணம் நடந்தது என்பது எனக்கு தெரியும். அதே போல அவருக்கும் யாருடன் திருமணம் நடந்தது என்பது தெரியும். எங்களுக்குள் எந்தவித குழப்பமும் இல்லை. மற்றவர்களுக்கு வேண்டுமானால் குழப்பம் இருந்திருக்கலாம். இருவரும் சேர்ந்து படத்தில் நடித்த போது கூட அவ்வளவாக பேசிக்கொள்ளவில்லை.
அவர் ரொம்ப ரிசர்வ் டைப். ஷார்ட் முடிந்ததும் அமைதியாக உட்கார்ந்து விடுவார். நானும் பெரிதாக அவரிடம் பேசியது கிடையாது. நடிகை சங்கீதாவை எனக்கு பிடிக்கும் என விஜய் பேட்டி அளித்திருந்ததாக நான் கேள்விப்பட்டேன். பொதுவாக சில பெயர்கள் காரணமே இல்லாமல் சிலருக்கு பிடிக்கும். எனக்கு சரவணன் என்ற பெயர் பிடிக்கும். அதே போல அவருக்கும் இருந்திருக்கலாம் என சங்கீதா விளக்கம் அளித்துள்ளார்.
View this post on Instagram