காதலி , நண்பர்கள் என குடும்பத்துடன் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடிய ‘வானத்தைப்போல’ சீரியல் ராஜபாண்டி… வீடியோ வைரல்…

சன் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று ‘வானத்தைப்போல’. இந்த சீரியல் அண்ணன், தங்கை பாசத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. தனது தங்கைக்காக வாழ்ந்து வருபவர் தான் சின்ராசு. அண்ணன் தான் உலகம் என்று இருப்பவர்தான் துளசி. துளசி வெற்றியை நீண்ட காலமாக காதலித்து வர, அண்ணன் விருப்பத்தோடு தான் திருமணம் செய்து கொள்வேன் என்று பிடிவாதமாக இருந்தார்.

   

ஒரு பக்கம் ராஜபாண்டி துளசியை ஒருதலையாக காதலித்து வந்தார். ஒருகட்டத்தில் ராஜபாண்டியை திருமணம் செய்து கொள்ள ஒத்துக் கொள்கிறார் துளசி. தற்பொழுது இவர்களது திருமணமும் முடிந்து இந்த சீரியல் பரபரப்பாகவும் விறுவிறுப்பாகவும் ஒளிபரப்பாகிக் கொண்டுள்ளது.

டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடத்தை பிடித்திருக்கும் இந்த ‘வானத்தைப்போல’ சீரியலில் ஆரம்பத்தில் வில்லனாக அறிமுகமாகி, பின் ஹிரோவாக மாறியவர்தான் நடிகர் கார்த்திக். ராஜபாண்டி கதாபாத்திரத்திற்கு ஏற்ப திறம்பட நடித்து ஒரு தனி ரசிகர்கள் பட்டாளத்தையே உருவாக்கியுள்ளார். இந்த சீரியலில் ராஜபாண்டி, துளசி லவ் சீனுக்காகவே சீரியல் பார்ப்பவர்கள் ஏராளம்.

சமீபத்தில் இவர் தனது காதலியுடன் இருக்கும் புகைப்படத்தை தனது  இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவு செய்திருந்தார். மேலும் தனது காதலியின் பெயர் காயத்ரி என்றும், அவர் மேக்கப் ஆர்ட்டிஸ்ட் என்றும் கூறியிருந்தார்.

சோசியல் மீடியாவில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக் கூடியவர் நடிகர் கார்த்திக். இவர் தற்பொழுது தனது பிறந்தநாளை தனது காதலி , நண்பர்கள் மற்றும் மொத்த குடும்பத்துடன் இணைந்து கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். இந்த வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த விடியோவை பார்த்த ரசிகர்களும், அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். இதோ அந்த வீடியோ…