நடிகர் மாரிமுத்து-வின் இறுதி நிமிடங்கள்..! இறப்பினை முன்கூட்டியே அறிந்து அவர் செய்த செயல்… வெளியான சிசிடிவி காட்சி இதோ…!!

நடிகர் மாரிமுத்து

இயக்குனரும், நடிகருமான மாரிமுத்து மாரடைப்பு காரணமாக இன்று காலை உயிரிழந்தார். இவரது உயிரிழப்பு சினிமா துறையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர் கடந்த 2011 ஆம் ஆண்டு யுத்தம் செய் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானார்.

RIPMarimuthu : பெரும் சோகம்...இயக்குநர், நடிகர் மாரிமுத்து மாரடைப்பால் காலமானார்! - Dinasuvadu

   

பின் இவர் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் தொடரில் ஆதிகுணசேகரன் என்ற கேரக்டரில் வில்லனாக நடித்தார். இந்நிலையில் இன்று காலை எதிர்நீச்சல் தொடரின் டப்பிங் பணியில் மாரிமுத்து ஈடுபட்டுள்ளார். அப்போது அவருக்கு சிறிது மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. உடனே வெளியே சென்ற மாரிமுத்து, அவரது காரை எடுத்து மெதுவாக மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அந்த சிசிடிவி காட்சியானது தற்போது வைரலாகி வருகிறது.