
சின்னத்திரை நடிகை ரச்சிதா மகாலட்சுமி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிரபல தொடர் சரவணன் மீனாட்சியின் இரண்டாவது சீசனில் நடித்து ரசிகர்களிடையே பிரபலமானார். அதைத் தொடர்ந்து, நாச்சியார்புரம், இது சொல்ல மறந்த கதை போன்ற தொடர்களில் நடித்தார். இவர் அறிமுகமான பிரிவோம் சந்திப்போம் என்ற தொடரில் தன்னுடன் இணைந்து நடித்த நடிகர் தினேஷை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
நன்றாக சென்று கொண்டிருந்த இவரின் திருமண வாழ்வில் விரிசல் விழுந்தது. தற்போது தன் கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார். இதனிடையே பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசனில் பங்கேற்றிருந்தார். தற்போது பிக் பாஸ் சீசன் 7-ல் அவரின் கணவர் தினேஷ் பங்கேற்றுள்ளார். இவருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது.
மேலும், அவரின் ரசிகர்கள் பலர் தினேஷ் மிகவும் நல்லவர். அவருடன் வாழ அவரின் மனைவிக்கு கொடுத்து வைக்கவில்லை என்று கமெண்ட் செய்து வருகிறார்கள். இந்நிலையில், சமூக வலைதளங்களில் அவ்வபோது தன் புகைப்படங்களையும் வீடியோக்களையும் பதிவிடும் ரட்சிதா, மறைமுகமாக தன் கணவரை சாடும் வகையில் எப்போதாவது கருத்து பதிவிடுவார்.
இந்நிலையில், தற்போது வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில் கடற்கரை ஓரத்தில் நின்று கொண்டு, கடலை ரசித்தவாறு கைகளை விரித்து ஆடிக்கொண்டே நடந்து வருகிறார். அதில், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் உலகத்தின் ஓரம் நின்று அத்தனையும் பார்த்திருப்போம் என்ற பாடல் பின்னணியில் ஒலிக்கிறது.