திருத்தணி முருகன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்த சீரியல் நடிகை ஸ்ருதி ராஜ்… வெளியான அழகிய புகைப்படங்கள்…

தமிழில் மிகவும் பிரபலமான சீரியல் நடிகைகளில் ஒருவர் ஸ்ருதி ராஜ். தளபதி விஜய் நடிப்பில் வெளிவந்த மாண்புமிகு மாணவன் என்ற திரைப்படம் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமான இவர் அதன்பின்னர் சரியான வாய்ப்புகள் அமையாததால் சீரியல் பக்கம் தாவினார்.

   

குறிப்பாக சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தென்றல் தொடரில் நாயகியாக நடித்தார் ஸ்ருதி. அதன்பின்னர் விஜய் தொலைக்காட்சியில் ஆபீஸ் என்ற தொடரில் நடித்து பிரபலமானார்.

தற்போது சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் அழகு தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.

தற்பொழுது 40 வயதை கடந்தும் இவர் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார்.

இதுவரை திருமணம் பற்றி யோசிக்கவே இல்லை என்று அவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூறியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

சமூகவலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்க கூடியவர் நடிகை ஸ்ருதி ராஜ். இவர் அவ்வப்பொழுது தனது புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வருகிறார்.

 

அந்தவகையில் நடிகை ஸ்ருதி ராஜ் திருத்தணி முருகன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.