நம்பவே முடியல… சாக்ஷியின் ஒரு மாத சம்பளம் எவ்ளோ தெரியுமா…? தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க…!

மாடல் மற்றும் நடிகையான சாக்ஷி அகர்வால் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் போட்டியாளராக பங்கேற்றார். அதில் தன்னுடன் பங்கேற்ற சக போட்டியாளரான கவினுக்கும் இவருக்கும் இடையே நடந்த மோதல் பரபரப்பாக பேசப்பட்டது. முதலில் நண்பர்களாக பழகிய அவர்கள் அதன்பிறகு எதிர்களாக மாறினர்.

   

இறுதியாக அனைத்து போட்டியாளர்களையும் பிக் பாஸ் வீட்டிற்குள் அனுப்பப்பட்டனர். அந்த சமயத்திலும் கவின், சாக்ஷியை பார்த்த பிறகு அமைதியாக இருந்து விட்டார். இருவரும் பேசிக் கொள்ளவில்லை. பிக் பாஸ் நிகழ்ச்சி முடிவடைந்த பிறகு திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் சாக்ஷி அகர்வால் சமீபத்திய பேட்டி ஒன்றில் பங்கேற்றார்.

அப்போது அவர் தெரிவித்ததாவது, நான் சுமார் 6 வருடங்களுக்கு முன்பு இரண்டரை லட்சம் சம்பளம் பெறும் நல்ல வேலையில் இருந்தேன். சினிமாவில் சாதிக்க வேண்டும் என்ற குறிக்கோள் இருந்ததால் தான் திரைப்படத்துறையை தேர்ந்தெடுத்தேன் என்று கூறியிருக்கிறார். அதை கேட்ட தொகுப்பாளினி அதிர்ச்சியாகிவிட்டார்.