தமிழ் சினிமாவின் தற்பொழுது வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக விளங்கி வருபவர் நடிகர் சித்தார்த். இவர் தற்பொழுது ‘இந்தியன் 2’ திரைப்படத்தில் நடித்துக் கொண்டு வருகிறார். அவ்வப்பொழுது இவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கும் கருத்துக்கள் பெரும் சர்ச்சையை கிளப்பி வருகின்றன.
இந்நிலையில் நடிகர் சித்தார்த் நடிகை அதிதியை காதலிப்பதாக கடந்த சில மாதங்களாக இணையத்தில் தகவல்கள் வெளியாகி வைரலாகி வருகிறது. இவர்கள் இருவரும் தெலுங்கில் வெளியான ‘மகா சமுத்திரம்’ திரைப்படத்தில் இணைந்து நடித்தனர்.
அப்பொழுது இருவருக்கும் இடையில் காதல் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. நடிகர் சித்தார்த் மற்றும் நடிகை அதிதி இருவருமே இயக்குனர் மணிரத்தினம் அவர்களால் திரையுலகில் அறிமுகமானார்கள்.
இவ்வாறுஇருக்கையில், பிரபல நடிகர் சித்தார்த் மற்றும் அதிதி ராவ் இருவரும் இணைந்து ட்ரெண்டிங் பாடலான டும் டும் பாடலுக்கு நடனம் ஆடிய வீடியோ அதிகம் வைரலாகி வருகிறது. சித்தார்த் மற்றும் அதிதி ஆகியோர் இணைந்து அப்படியே ட்ரெண்டிங்கில் இருக்கும் நடன அசைவுகளை மிக அற்புதமாக சேர்ந்து ஆடியுள்ளனர்.
நடிகை அதிதி பகிர்ந்த இந்த வீடியோவில், பல பிரபலங்களும் ‘அப்போ அது உண்மை தானா?’ என்று அவர்களிடம் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்த வீடியோ இணையத்தில் தற்பொழுது படுவைரலாகி வருகிறது.
வைரலாகும் அந்த வீடியோ இதோ…
View this post on Instagram