மீண்டும் சூடு பிடிக்கும் Me too விவகாரம்… சர்ச்சையில் சிக்கிய வைரமுத்து… சின்மயியை தொடர்ந்து புகாரளித்த மீண்டும் ஒரு பாடகி…

தமிழ் திரையுலகில் புகழ்பெற்ற பாடல் ஆசிரியராகவும், கவிஞராகவும் வலம் வந்தவர் கவிஞர் வைரமுத்து. இவர் ஆறு முறை தேசிய விருதும், கலை மாமணி விருதும், பத்மஸ்ரீ விருதும் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. கவியரசு, கவிப்பேரரசு போன்ற பட்டங்களையும் பெற்றவர். இவர் 1978ல் பாரதிராஜா அவர்களின் ‘நிழல்கள்’ திரைப்படத்தில் பாடல் ஆசிரியராக அறிமுகமானார்.

   

‘இது ஒரு பொன்மாலைப் பொழுது’ என்ற பாடலே அவர் திரையுலகில் இயற்றிய முதல் பாடல். இதை தொடர்ந்து இவரது பாடல்கள் மற்றும் பாடல் வரிகள் அனைத்தும் ரசிகர்களால் பெரிதும் வரவேற்கப்பட்டது . 80ஸ் தொடங்கி தற்பொழுது வரை வைரமுத்து அவர்களின் வரிகளுக்கென்று தனி ரசிகர்கள் கூட்டம் இருக்கத்தான் செய்கின்றனர். இவர் இயற்றிய பல பாடல்களுக்கு தேசிய விருது கிடைத்ததும் குறிப்பிடத்தக்கது.

உலகம் முழுவதும் உள்ள பெண்கள் மீ டூ என்ற அமைப்பின் மூலமாக தங்களுக்கு நடந்த பாலியல் தொல்லைகளை பற்றி தைரியமாக பேசி வருகின்றனர். தமிழ் திரை உலகிலும் பெண்களுக்கு பாலியல் தொல்லைகள் ஏற்படுவதாக பாடகி சின்மயி குற்றச்சாட்டுகளை முன் வைத்து வருகிறார். மேலும் கவிஞர் வைரமுத்து மீதும் பல்வேறு குற்றசாட்டுகளை முன் வைத்து இருக்கிறார். அவரை தொடர்ந்து பல பெண்கள் வைரமுத்து மீது குற்றம் சாட்டி வருகின்றனர்.

சமீபத்தில் கவிஞர் வைரமுத்து தனது 70வது பிறந்தநாளை கொண்டாடினார். இதற்கு அவருக்கு வாழ்த்து தெரிவிக்க தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவரின் வீட்டுக்கு சென்று வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார். இதை பார்த்த சின்மயி தனது டுவிட்டர் பக்கத்தில் வைரமுத்துவின் மீது மீடூ  புகார் கூறி ஐந்தாண்டுகளாகியும் இதுவரை ஆக்சன் எடுக்காமல் அவருடன் நட்பு பாராட்டி வருகிறார்கள் என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருந்தார்.

இதைத்தொடர்ந்து தற்பொழுது வைரமுத்துவின் மீது மற்றொரு பாடகியும் மீ டூ புகார் தெரிவித்து அதிர்ச்சி கொடுத்துள்ளார். பின்னணி பாடகியான வினைதா தான் இந்த புகாரை அளித்தவர். அவர் கூறியுள்ளதாவது ‘சின்மயி வைரமுத்துக்கு எதிராக பேசினார். நான் அதை ஆதரித்தேன். ஏனெனில் அவர் உண்மையை பேசினார். அவருக்கு நடந்ததை போல் எனக்கும் நடந்தது. அதுவும் வைரமுத்துவால் தான். அவர் நல்ல மனிதரை இல்லை.

அவர் என்னை பாட அழைத்தார். அதோடு ஒரு இடத்துக்கு சொல்லி அங்கே தனியாக வருமாறு என்னை அழைத்தார். அவர் எப்போதும் முகத்தை பார்த்து பேசவே மாட்டார். இது போன்ற நிறைய பெண்களிடம் தவறாக நடந்துள்ளார்’ எனக் கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார் பாடகி வினைதா. இவரைப்போல கடந்த மாதம் பாடகி புவனா சேஷன் வைரமுத்துவின் மீ டூ  புகார் கொடுத்தது குறிப்பிடத்தக்கது. தற்பொழுது இந்த மீ டூ விவகாரம் இணையத்தில் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.