
தமிழ் திரை உலகில் தளபதிக்கான இடம் காலியாக உள்ளது. எனவே, சிவகார்த்திகேயன் தான் அடுத்து விஜய் இடத்திற்கு தகுதியானவர் என்ற தகவலும் பரவிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் பேட்டி ஒன்றில் சிவகார்த்திகேயன், விஜய் தன்னை பாராட்டியது குறித்து பேசி உள்ளார்.
அவர் தெரிவித்திருப்பதாவது, பீஸ்ட் திரைப்படத்தின் படப்பிடிப்பு என் படத்தின் படப்பிடிப்பிற்கு அருகில் தான் நடந்துகொண்டிருந்தது. வழக்கமாக, சீனியர் நடிகர் என்றால் மரியாதையை நிமித்தமாக சென்று பார்ப்பேன். அதே போன்று, என் நண்பர் நெல்சன் தான் இயக்குனர் என்பதால் பீஸ்ட் செட்டிற்கு எங்கள் குழுவினரோடு சென்று விட்டோம்.
விஜய் சாரை பார்த்து எல்லோரும் பேசினோம். அப்போது, அவரிடம் நெல்சன் எப்படி நடந்து கொள்கிறார். ஜாலியாகவே சுற்றிக் கொண்டிருப்பாரே? என்று கேட்டேன். அதற்கு, விஜய் சார் ஆமா, அவன் ஜாலியா தான் சுத்திகிட்டு இருக்கான் என்று சொன்னார். ஆனால் கேரக்டர் மட்டும் சரியாக எடுத்துவிடுவார்.
டாக்டர் திரைப்படத்தில் அப்படித்தான் எடுத்திருந்தார் என்று கூறினேன். உடனே, அவர் டாக்டர் படம் சூப்பராக இருந்தது. அந்த கேரக்டரில் நன்றாக நடித்து இருந்தாய் என்று கூறினார் என சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.