சிவகார்த்திகேயனின் மாறுபட்ட நடிப்பில் வெளிவந்த ‘மாவீரன்’ படம் எப்படி இருக்கு?… ட்விட்டரில் அனல் பறக்கும் விமர்சனங்கள்…

சாந்தி டாக்கீஸ் அருண் விஸ்வா தயாரிப்பில் தேசிய விருது பெற்ற இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்கியுள்ள படம் மாவீரன். நடிகர் சிவகார்த்திகேயன் மிகவும் நம்பியிருக்கும் இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் நடித்துள்ளார். இவர்களுடன் மிஷ்கின், யோகிபாபு, சரிதா, சுனில் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

   

விஜய் சேதுபதி முக்கிய குரல் ஒன்றாக படத்தில் வருகிறார். இதனால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. படம் இன்று வெளியாகியுள்ள நிலையில் திரைப்படத்தை பலரும் ரசித்து வருகின்றனர். இத்திரைப்படத்தை பற்றிய பல்வேறு விமர்சனங்களையும் ட்விட்டரில் கூறி வருகின்றனர்.

இத்திரைப்படத்தில் கலகலப்பான சிவகார்த்திகேயன் கொஞ்சம் பொறுமையைக் கையாண்டு கதைக்கேற்ப நடித்து அசத்தியிருக்கிறார். பிற்பாதியில் மாவீரனாக தைரியமாக நின்று போராடும்போது சூப்பர் ஹீரோ என்றும் கூறி வருகின்றனர்.  வில்லனாக நடித்திருக்கும் மிஷ்கினுக்கு பல பில்டப்புகள் இருந்தாலும் பயமுறுத்தும்படி அவர் எதையும் செய்துவிடவில்லை என்பதே பலரின் கருத்தாக இருக்கிறது.

காமெடி நடிகராக இத்திரைப்படத்தில் வரும் நடிகர் யோகிபாபு வேற லெவலில் டைமிங் காமெடியில் அசத்தியிருக்கிறார். இப்படி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று இன்று திரையரங்குகளில் வெளியாகி மாஸாக ஓடி வருகிறது சிவகார்த்திகேயனின் மாவீரன் திரைப்படம். மேலும் பிரபலங்கள் பலரும் இத்திரைப்படத்தை பார்க்க தியேட்டருக்கும் சென்று வருகின்றனர். இத்திரைப்படம் சிவகார்த்திகேயனின் திரைவாழ்க்கையில் ஒரு திருமுனையாக அமையும் என்பதில் எந்த ஐயமும் இல்லை என்றே கூறலாம்.