
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் ,சாந்தி டாக்கீஸ் அருண் விஸ்வா தயாரிப்பில் தேசிய விருது பெற்ற இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்கியுள்ள படம் மாவீரன். இத்திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் நடித்துள்ளார். இவர்களுடன் மிஷ்கின், யோகிபாபு, சரிதா, சுனில் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் படத்தில் வருகிறார். இதனால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இத்திரைப்படம் ரிலீசாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இத்திரைப்படத்தில் கலகலப்பான சிவகார்த்திகேயன் கொஞ்சம் பொறுமையைக் கையாண்டு கதைக்கேற்ப நடித்து அசத்தியிருக்கிறார்.
பிற்பாதியில் மாவீரனாக தைரியமாக நின்று போராடும்போது சூப்பர் ஹீரோ என்றும் கூறி வருகின்றனர். காமெடி நடிகராக இத்திரைப்படத்தில் வரும் நடிகர் யோகிபாபு வேற லெவலில் டைமிங் காமெடியில் அசத்தியிருக்கிறார். இத்திரைப்படத்தில் இடம்பெற்ற ‘வண்ணாரப்பேட்டையில’ பாடல் ட்ரெண்டிங் பாடலாகவும் மாறியுள்ளது.
இப்படி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வருகிறது சிவகார்த்திகேயனின் மாவீரன் திரைப்படம். தற்பொழுது மாவீரன் திரைப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் சத்யா கதாபாத்திரத்திற்கான மேக்கிங் வீடியோ ஒன்று இணையத்தில் தீயாய் பரவி வருகிறது .இதோ அந்த வீடியோ…
View this post on Instagram