
நடிகர் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் அவரின் 21வது திரைப்படத்திற்கான டைட்டில் அமரன் என்று வைக்கப்பட்டிருக்கிறது. இராணுவ வீரரின் உண்மை கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் அத்திரைப்படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
இந்நிலையில், அந்த இது குறித்து வலைப்பேச்சு பிஸ்மி தெரிவித்திருப்பதாவது, சிவகார்த்திகேயனின் திரைப்படத்திற்கு அமரன் என்று பெயர் சூட்டியிருக்கிறார்கள். கடந்த 1992 ஆம் வருடத்தில் கார்த்திக் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் அமரன். அந்த சமயத்தில் அத்திரைப்படம் தோல்வியை சந்தித்தது.
தற்போது, அத்திரைப்படத்திற்கான பெயரையே இந்த படத்திற்கும் வைத்திருக்கிறார்கள். அதற்கு காரணம் என்னவென்றால், ராஜ் கமல் தயாரிப்பு நிறுவனத்திற்கு அதில் ஒரு அதிர்ஷ்டம் இருக்கிறது. அதாவது கமல்ஹாசன் நடிப்பில் வெளியான அவரின் பழைய விக்ரம் திரைப்படம் தோல்வியடைந்தது.
அந்த திரைப்படத்தின் தலைப்பை தான் இயக்குனர் லோகேஷ் நாகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த திரைப்படத்திற்கும் வைத்திருந்தார்கள். அத்திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. எனவே, தான் இத்திரைப்படமும் வெற்றிபெறும் என்ற நம்பிக்கையில் வைத்திருக்கிறார்கள் என்று பிஸ்மி கூறியுள்ளார்.