ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிய ‘அழகி’ பட நடிகை… வெளிவந்த லேட்டஸ்ட் புகைப்படம்…

பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் தான் நடிகை நந்திதா தாஸ். இவர் கடந்த 2000 ஆம் ஆண்டு அழகி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அந்தத் திரைப்படத்தில் பார்த்திபனுடன் இணைந்து நடித்திருப்பார். அதில் இவரின் நடிப்பு ரசிகர்கள் மத்தியில் வெகுவாக பாராட்டப்பட்ட நிலையில் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தையும் பிடித்தார்.

   

அதன் பிறகு மணிரத்தினம் இயக்கத்தில் உருவான கன்னத்தில் முத்தமிட்டால் உள்ளிட்ட ஒரு சில தமிழ் திரைப்படங்களில் நடித்த இவர் கடந்த ஆண்டு தெலுங்கு திரைப்படம் ஒன்றில் கூட நடித்திருந்தார். இப்படி பிசியாக நடித்து வந்த இவர் கடந்த 2002ஆம் ஆண்டு சௌமியா சென் என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால் திருமணம் முடிந்து சில வருடங்கள் மட்டுமே ஒன்றாக சேர்ந்து வாழ்ந்து வந்த இவர் சில வருடங்களில் விவாகரத்து பெற்று பிரிந்தார்.

அதன் பிறகு படங்களில் பிசியாக நடித்து வந்த நிலையில் சுபோது மசகாரா என்பவரை மறுமணம் செய்து கொண்டார். இதனைத் தொடர்ந்து இந்த தம்பதிகளுக்கு விஹான் என்ற ஒரு மகனும் உள்ளார். திருமணத்திற்கு பிறகும் சினிமாவில் நடிக்க ஆர்வம் கொண்ட இவர் தெலுங்கு சினிமாவில் தற்போது ஒரு சில திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

அதே சமயம் மற்ற நடிகைகளை போலவே இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி தனது புகைப்படங்கள் மற்றும் குடும்ப புகைப்படங்களை பகிர்ந்து வருவது வழக்கம். அதன்படி தற்போது அவரின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று வெளியாகி உள்ளது. அந்த புகைப்படத்தில் அவர் ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு உள்ளார்.