சினேகாவின் அண்ணனுக்கு இவ்ளோ பெரிய மகள் இருக்காரா..? வெளியான Graduation Day புகைப்படங்கள்…

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான மற்றும் இளைஞர்களின் கனவு கன்னியாக திகழ்ந்தவர் தான் நடிகை சினேகா. இவரை புன்னகை அரசி என்ற பெயரைக் கொண்டு தான் பலரும் அழைப்பார்கள்.

   

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான அஜித் மற்றும் விஜய் உள்ளிட்ட அனைத்து நட்சத்திரங்களுடனும் சேர்ந்து நடித்து மிகப்பெரிய வரவேற்பை பெற்றார்.

இப்படி சினிமாவில் பிஸியான நடிகையாக இருந்த இவர் கடந்த 2012 ஆம் ஆண்டு நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

அதன் பிறகு குடும்ப பொறுப்பில் கவனம் செலுத்த ஆரம்பித்த இவருக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர்.

இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் இணையத்திலும் ஆக்டிவாக இருந்து வரும் சினேகா தனது குடும்பத்தில் விசேஷங்கள் நடைபெற்றால் அந்த புகைப்படங்களை பகிர்வது வழக்கம்.

இதனிடையே சினேகாவிற்கு ஒரு சகோதரி உள்ளதை அனைவரும் அறிந்திருப்போம். அதனைப் போலவே கோவிந்த் நாயுடு என்ற அண்ணனும் உள்ளார்.

அவர் முதலில் டான்ஸ் மாஸ்டர் கலாவை 1997ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு கர்த்தர் நாட்டில் செட்டிலானார்.

அதன் பிறகு சில கருத்து வேறுபாடுகள் காரணமாக இருவரும் 1999 ஆம் ஆண்டு விவாகரத்து செய்து பிரிந்து விட்டனர்.

அதன் பிறகு கோவிந்த் இரண்டாவதாக சௌமியா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர் ஒரு புகழ் பெற்ற பரதநாட்டிய கலைஞர்.

இந்த தம்பதிகளுக்கு தற்போது ஒரு மகனும் அக்ஷரா என்ற ஒரு மகளும் உள்ளனர். இந்த நிலையில் சினேகாவின் அண்ணன் மகள் அக்ஷராவின் school Graduation day புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.