பிரபல தொழிலதிபர் ரேணுகா பிரவீன் பிறந்த நாள் கொண்டாட்டம்… கலந்து கொண்ட பிரபல நடிகைகள்… வெளியான புகைப்படங்கள்…

பிரிட்டனில் சில ஆண்டுகள் பணியாற்றி விட்டு தென்னிந்தியாவிலேயே முதல் முறையாக lash studio – வை ஆரம்பித்த அழகு கலை நிபுணர் தான் ரேணுகா பிரவீன்.

   

இவர் தென்னிந்தியாவில் முதல் முறையாக ஐலாஷ்களுக்கான அழகு நிலையத்தை ஆரம்பித்தவர்.

இவர் அழகு நிலையத்தில் பிரபல நடிகைகளான சமந்தா, மீனா மற்றும் சினேகா உள்ளிட்ட பல பிரபலங்கள் ரெகுலர் கஸ்டமர்களாக உள்ளனர்.

இதனைத் தொடர்ந்து தற்போது மீனா மற்றும் சினேகா உள்ளிட்ட நடிகைகள் பலரும் ரேணுகாவின் நெருங்கிய தோழிகளாக மாறிவிட்டனர்.

இங்கிலாந்தை சேர்ந்த தொழிலதிபர் ரேணுகா பிரவீன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வார் என சமீபத்தில் பல தகவல்களும் உலா வந்தது.

சென்னையில் கண் இமைகளுக்காக ஸ்பெஷல் ஆக ஸ்டூடியோ நடத்தி வரும் இவர் தற்போது மிகவும் பிரபலமாகிவிட்டார்.

இதனிடையே எப்போதும் இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் ரேணுகா பிரவீன் அடிக்கடி தனது க்யூட்டான புகைப்படங்களை பகிர்வது வழக்கம்.

அதன்படி இவர் நேற்று தனது பிறந்த நாளை மிக பிரம்மாண்டமாக கொண்டாடியுள்ளார்.

இவரின் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் இவரின் நெருங்கிய தோழிகளான திரை பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

அதாவது நடிகை சினேகா, பிரசன்னா, சினேகாவின் அக்கா சங்கீதா, நடிகை மீனா என பலரும் இவரின் பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்டனர்.

அது தொடர்பான புகைப்படங்கள் தற்போது வெளியாகி உள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.