மாடியில் போட்டோ ஷூட் நடத்திய ‘சூது கவ்வும்’ பட நடிகை சஞ்சிதா செட்டி வைரலாகும் புகைப்படங்கள்….

இயக்குனர் நகுலன் குமாரசாமி இயக்கத்தில் சீ வீ குமார் தயாரிப்பில் 2013ஆம் ஆண்டு வெளியான படம் ‘சூது கவ்வும்’ இப்படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

   

இப்படத்தில் விஜய் சேதுபதி,  சஞ்சிதா செட்டி,  அசோக் செல்வன்,  சிம்ஹா,  ரமேஷ் திலக்,  கருணாகரன்,  ராதாரவி,  எம் எஸ் பாஸ்கர் போன்ற பிரபலங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர்.

இப்படத்தில் கதாநாயகியாக நடித்த மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றவர் நடிகை சஞ்சிதா ஷெட்டி இவர் கர்நாடகாவை பூர்வீகமாகக் கொண்டவர்.

2006 ஆம் ஆண்டு வெளியான ‘முங்காரு மலே’ என்ற கன்னட திரைப்படத்தின் மூலமாக கதாநாயகனின் தோழியாக  நடித்து  திரையுலகில் அறிமுகமானார்.

அதை தொடர்ந்து மிலானா, உடா மற்றும் பய.காம்  போன்ற மூன்று கன்னடப் படங்களில் துணை  கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

2019 ஆம் ஆண்டு வெளியான ‘அழுகன் அழககிரான்’  என்ற திரைப்படத்தில்  நடித்து தமிழ் திரையுலகில் அறிமுகமானார். அதைத் தொடர்ந்து ஜெயம் ரவி நடிப்பில் வெளியான ‘தில்லாலங்கடி’ படத்திலும்  நடித்திருந்தார். இப்படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.

அதை தொடர்ந்து இவர் தமிழில் ஆரஞ்சு, கொள்ளைக்காரன், என்கிட்ட மோதாதே, மரகதம், என்னோடு விளையாடு, ரம்,  தேவதாஸ் சகோதரர்கள் போன்ற பல படங்களில்  நடித்துள்ளார்.  பகீரா,

பல்லு படாம பாத்துக்க, அழகிய கண்ணே போன்ற படங்களில்  இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான படங்கள். இவர்  சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருக்கக் கூடியவர்.

அடிக்கடி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்டோ சூட் நடத்தி  புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.தற்போது அந்த புகைப்படம் ஆனது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.