‘என்னுடைய கனவு நனவானது’… சூப்பர் ஸ்டாரின் மகளுக்கு நன்றி கூறி எமோஷனல் பதிவு வெளியிட்ட நடிகை நிரோஷா…

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் லால் சலாம். ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் விக்ராந்த், விஷ்ணு விஷால் நாயகர்களாக நடித்து வரும் இந்த படத்தில் ரஜினிகாந்த் ஒரு சிறப்பு கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

   

மேலும் இந்த படத்தில் ரஜினிக்கு தங்கையாக பழம்பெரும் நடிகை ஜீவிதா நடிப்பதாக தகவல் வெளியானது. ஆனால் ரஜினிக்கு ஜோடியாக நடிக்கப்போவது யார் என்பது பற்றி தகவல் மட்டும் வெளியாகாமல் இருந்து வந்தது. இதைத்தொடர்ந்து பிரபல நடிகையான நிரோஷா சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு ஜோடியாக இந்த படத்தில் நடிப்பதாக சொல்லப்படுகிறது.

80களில் முன்னனி நடிகையாக இருந்த ஒருவர்தான் நடிகை நிரோஷா. அவருடைய ஆசையே ரஜினியோடு நடிக்க வேண்டுமென்பது. கமல் மற்றும் மற்ற நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்த நிரோஜா ரஜினியுடன் மட்டும் இதுவரை நடித்ததில்லை. அந்த கனவு இப்போது நிறைவேறியிருக்கிறது.

தற்பொழுது இவர் லால்சலாம் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்ததால் தன்னுடைய கனவு நிறைவேறிவிட்டதாக , சூப்பர் ஸ்டாரின் மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்துக்கு நன்றி கூறி உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த பதிவானது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த பதிவு…

 

View this post on Instagram

 

A post shared by Nirosha Ratha (@nirosha_radha)