கணவர் மற்றும் குழந்தையுடன் ஜாலியாக அவுட்டிங் சென்ற சீரியல் நடிகை ஸ்ரீதேவி அசோக்… வெளியான அழகிய புகைப்படங்கள்..

தமிழ் சின்னத்திரையில் ஏராளமான ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டு சீரியல்களில் நடித்துக் கொண்டிருப்பவர் தான் நடிகை ஸ்ரீதேவி அசோக்.

   

தனுஷ் நடிப்பில் வெளியான புதுக்கோட்டையில் இருந்து சரவணன் உள்ளிட்ட ஒரு சில தமிழ் திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார்.

இவருக்கு படங்களில் அதிக அளவு வாய்ப்பு கிடைக்காத நிலையில் சின்னத்திரையில் ஆர்வம் கொண்டு தற்போது சீரியல்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

அதிலும் குறிப்பாக சன் டிவியில் ஒளிபரப்பான கஸ்தூரி, இளவரசி மற்றும் தங்கம் உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்துள்ளார்.

அதனைப் போலவே விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியலிலும் கலைஞர் டிவியில் ஒளிபரப்பான மாநாட மயிலாட என்ற டான்ஸ் நிகழ்ச்சியிலும் இவர் கலந்து கொண்டுள்ளார்.

தற்போது இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் காற்றுக்கென்ன வேலி சீரியலில் நடித்துக் கொண்டிருக்கிறார். இவரின் நடிப்பு திறமைக்கு தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.

அது மட்டுமல்லாமல் தன்னுடைய க்யூட்டான சிரிப்பால் ஏராளமான ரசிகர்களை தன்வசம் ஈர்த்துள்ளார். இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு அசோக் என்ற போட்டோகிராபரை திருமணம் செய்து கொண்டார்.

இவருக்கு தற்போது ஒரு பெண் குழந்தையும் உள்ளது. இவர் கர்ப்பமாக இருந்த சமயத்தில் தனது கணவருடன் போட்டோ சூட் எடுத்து அதனை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்த நிலையில் அவை மிகப்பெரிய அளவில் வைரல் ஆனது.

இதனிடையே இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்தில் பகிர்வது வழக்கம்.

அதன்படி தற்போது தனது கணவர் மற்றும் குழந்தையுடன் விடுமுறையை கொண்டாட நீலகிரி சென்று இருந்த நிலையில் அது தொடர்பான புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.