என் வாழ்க்கையில அவ்வளவு கஷ்டத்தை அனுபவிச்சேன்…. சூப்பர் சிங்கர் 9 வெற்றியாளர் அருணா பகிர்ந்த சோகம்…

விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று தான் சூப்பர் சிங்கர். கிட்டத்தட்ட 15 வருடங்களுக்கு மேலாக புத்தம் புதிய சீசங்களோடு ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சி ஜூனியர் மற்றும் சீனியர் என இரண்டும் நிறைந்த சீசன்களாக ஒளிபரப்பாகி உள்ளது. இந்த ஒன்பதாவது சீசனோடு media mason தயாரிப்பு நிறுவனம் விலக உள்ள நிலையில் அவர்களுக்கு பதில் global villagers இனி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை தயாரித்து நடத்த உள்ளது.

   

இதனிடையே சமீபத்தில் பெரியவர்களுக்கான ஒன்பதாவது சீசன் முடிவுக்கு வந்தது. அதில் அருணா வெற்றியாளராக வாகை சூடினார். இந்நிலையில் வெற்றி பெற்றுள்ள அருணா ஒரு சோகமான விஷயத்தை பகிர்ந்து உள்ளார். அதாவது சூப்பர் சிங்கருக்கு வரும் முன்பு தான் நிறைய மேடைகளில் பாடியுள்ளேன், அப்போதெல்லாம் நீங்கள் என்ன சாமி என்பதை தான் முதலில் கேட்பார்கள்.

எனது ஜாதியை சொல்லிவிட்டால் எனக்கு அடிக்கடி பட வாய்ப்புகள் கிடைக்காமல் போகும் என்ற பயத்தில் அவர்களை தவிர்த்து விடுவேன். போகும் இடமெல்லாம் இதையே கேட்டு தொந்தரவு செய்வார்கள். அதனால் பயந்து பல நாட்கள் வீட்டில் முடங்கியுள்ளேன்.

இந்த சூப்பர் சிங்கர் வெற்றி தான் நான் அவர்களுக்கு கொடுக்கும் பதில். இனி உலகில் எந்த ஒரு மூளைக்கும் சென்று என்னால் பாட முடியும் என்ற நம்பிக்கை எனக்குள் வந்துள்ளது என்று நெகிழ்ச்சியாக அருணா பேசியுள்ளார்.