விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களுக்கு என்று மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு உள்ளது. அந்த வகையில் விஜய் டிவியில் சூப்பர் ஹிட் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் நிகழ்ச்சி தான் ‘சூப்பர் சிங்கர் சீசன் 9’.
இந்நிகழ்ச்சியை மாகாபா ஆனந்த் மற்றும் பிரியங்கா பாண்டிதொகுத்து வழங்கி வருகின்றனர். இதில் அனுராதா ஸ்ரீராம், உன்னிகிருஷ்ணன், ஸ்வேதா மோகன் மற்றும் பென்னி தயாள் போன்றவர்கள் உள்ளனர்.
இதில் அபிஜித், அனில் குமார், அருணா சிவயா, பூஜா வெங்கட்ராமன், பிரியா ஜிஸ்டர், பிரசன்னா, அபர்ணா போன்ற போட்டியாளர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இதில் சிறப்பாக பாடி மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றவர் பாடகி அபர்ணா.
இவர் கே எம் கல்லூரியில் learn Music and Technology as a part-time vocal class படித்தார். இசையமைப்பாளர் பிரசாந்த் ஸ்ரீனிவாஸுடன் இணைந்து நிகழ்த்திய நிகழ்ச்சியின் மூலம் பார்வையாளர்களைக் கவர்ந்தார்.
இவர் தமிழில் அச்சம் என்பது மடமையடா, குருவி, ஓகே கண்மணி, Bombay, சர்கார் போன்ற படங்களில் பாடியுள்ளார். பாடகி அபர்ணா ஸ்கந்த கோபாலன் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
இவர் சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக உள்ளவர். தற்போது இவரின் குடும்ப புகைப்படமானது இணையத்தில் வெளியாகியுள்ளது.