
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்றாலே அவரின் ஸ்டைல் தான். தனது தனித்துவமான ஸ்டைலால் ரசிகர்களை கவர்ந்து, பல காலங்களாக உச்ச நட்சத்திரமாக ஜொலித்தவர். அவரைப் போன்றே தோற்றம் கொண்ட என்ற நடிகர் முந்தானை முடிச்சு என்ற திரைப்படத்தில் சண்டைக் காட்சி ஒன்றில் நடித்திருப்பார்.
இந்நிலையில், இயக்குனர் பாக்யராஜ் நடத்திய பேட்டி ஒன்றில் பங்கேற்ற அவர் தெரிவித்ததாவது, என்னைப் போன்றே சகோதரர் ரஜினிகாந்த் இருப்பார். நாங்கள் இருவரும், ஒரே பேட்ச்சில் தான் படித்தோம். ஒன்றாக தான் திரைப்படத்தில் நடிப்பதற்கு முயற்சி செய்து கொண்டிருந்தோம்.
அப்போது, இயக்குனர் பாலச்சந்தர் ரஜினிகாந்திற்கு வாய்ப்பு கொடுத்து விட்டார் என்று தெரிவித்திருக்கிறார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் பலரும் ரஜினிகாந்த் உங்களைப் போன்று இருந்தார் என்று கூறுகிறீர்கள், நீங்கள் தான் அவரை போல் இருக்கிறீர்கள். எப்போதும் சூப்பர் ஸ்டார் மட்டும் தான் மாஸ், என்றெல்லாம் கமெண்ட் செய்து வருகிறார்கள். மேலும், சிலர் அவரை திட்டி வருகின்றனர்.