கேவி ஆனந்த் குடும்பத்திற்கு தீடீர் விசிட் அடித்த சூர்யா குடும்பம்.. ஓ இதுதான் சமாச்சாரம்..!!

தமிழ் சினிமாவின் மிகப் பிரபலமான நடிகராக வலம் வருபவர் நடிகர் சூர்யா. இவரது திரை வாழ்க்கையில் தனது திறமையான படங்கள் மூலம் ரசிகர்களுக்கும் உணர்த்தியவர் தான் இயக்குனர் கே,வி.ஆனந்த். இயக்குனரும், ஒளிப்பதிவாளரான கே.வி.ஆனந்த், ‘அயன்’, ‘கோ’, ‘மாற்றான்’, ‘காப்பான்’ உள்ளிட்ட படங்களை இயக்கியவர். சூர்யாவின் முதல் படமான நேருக்கு நேரில் கே.வி.ஆனந்த் ஒளிப்பதிவாளர். கே.வி.ஆனந்த் இயக்கிய கடைசி படமான காப்பானில் சூர்யா நாயகன்.

   

சூர்யாவின் திரை வாழ்க்கையில் மிக முக்கிய வெற்றிப் படமான அயன், கே.வி.ஆனந்த் இயக்கத்தில் உருவானது தான். இந்நிலையில் கொரோனா காலகட்டத்தில், கே.வி.ஆனந்த் மாரடைப்பால் உயிரிழந்தார்.

இந்த நிலையில் கேவி ஆனந்த் மகளுக்கு திருமணம் நிச்சயம் ஆகி உள்ளது. எனவே சூர்யா தனது தந்தை சிவகுமாருடன் கேவி ஆனந்த் வீட்டிற்கு சென்று அவரது மகளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். மேலும் மகாத்மா காந்தி ஓவியத்தை சிவக்குமார் கேவி ஆனந்த் மகளுக்கு தனது திருமண பரிசாக கொடுத்தார்.

மேலும் கே.வி ஆனந்த் முழு குடும்பத்தினர்களுடன் சூர்யா மற்றும் சிவகுமார் புகைப்படம் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.