சன் தொலைக்காட்சியில் பிரபலமாக ஒளிபரப்பப்பட்டு வந்த ரோஜா என்ற தொடரில் கதாநாயகியாக நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை பிரியங்கா நல்காரி. ரோஜா தொடர் கடந்த வருடம் நிறைவடைந்தது. அதனையடுத்து, ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் சீதாராமன் என்ற தொடரில் நடித்தார்.
எனினும், அத்தொடரிலிருந்து பாதியிலேயே விலகிய அவர், திடீரென்று மலேசியாவில் இருக்கும் கோயில் ஒன்றில் ரகசியமாக தன் காதலனை திருமணம் செய்துகொண்டார். மேலும் தன் திருமண புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தார். கடந்த வருடம் மார்ச் மாதத்தில் திருமணம் செய்து கொண்டு மலேசியாவில் செட்டில் ஆகிவிட்டார்.
எனவே இனிமேல் நடிக்க மாட்டார் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால், ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் நளதமயந்தி என்ற தொடரின் மூலம் மீண்டும் நடிக்க தொடங்கினார். சமீப நாட்களாக தன் வலைதள பக்கத்தில் சோகமான பதிவுகளை பதிவிட்டுக் கொண்டிருக்கும், இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடப்பட்டிருந்த தன் காதல் கணவரின் புகைப்படங்களையும் நீக்கிவிட்டார்.
இந்நிலையில், ரசிகர் ஒருவர் அவரிடம் நீங்கள் சிங்கிளா? என்று கேட்டதற்கு ஆமாம் என்று பதில் கூறியிருக்கிறார். எனவே தற்போது அவரது கணவரை பிரிந்து வாழ்ந்து வருவது உறுதியாக தெரிகிறது. எனினும், திருமணம் ஆன ஒரே ஆண்டில் கணவரை பிரிய என்ன காரணம்? என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.