பொதுவாக தமிழ் திரை உலகில் சில நடிகர்கள் அப்பா மகனாக நடித்து திரையரங்கை விட்டு வெளியே வந்தாலும் விலகாமல் கண்ணில் நிற்பார்கள். பொதுவாகவே ஹீரோக்கள் அனைவருக்கும் முதல் ஹீரோவாக அவர்களின் அப்பா தான் திகழ்வார்கள். அப்படி தமிழ் சினிமா நடிகர்களின் ஹீரோவாக திகழும் அப்பாக்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
அரவிந்த்சாமி:
தமிழ் திரைப்பட உலகில் நடிகராக திரைப்படத்தை தொடங்கி தற்போது குணச்சித்திர நடிகர் மற்றும் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றார் அரவிந்த்சாமி. இவரின் தந்தையான டெல்லி குமார் வெள்ளித்திரை மட்டுமல்லாமல் சின்ன திரையிலும் கலக்கி வருகிறார். இவர் பல சீரியல்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.
அஜித் குமார்:
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித்குமாரின் தந்தை சுப்பிரமணியம். அஜித்துக்கு உடன்பிறந்த இரண்டு சகோதரர்கள் உள்ளனர். அஜித்தின் தந்தை சுப்பிரமணியம் சமீபத்தில் தான் காலமானார்.
விக்ரம்:
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விக்ரமின் தந்தை வினோத் ராஜ். இவர் ஒரு கன்னட நடிகர். பல தமிழ் திரைப்படங்களிலும் இவர் நடித்துள்ளார். இவர் நடன கிங் என்ற பட்டத்தை பெற்றவர்.
சிவகார்த்திகேயன்:
மிமிக்ரி ஆர்டிஸ்ட் ஆக தனது திரை பயணத்தை தொடங்கி தற்போது முன்னணி நடிகராக வளர்ந்து நிற்பவர் தான் சிவகார்த்திகேயன். இவரின் தந்தை ஜி.தாஸ். இவர் காவல் துறையில் பணியில் உள்ளார். சிறை கண்காணிப்பாளராக இருந்தவர்.
விஷால்:
தமிழ் சினிமாவில் குறைந்த திரைப்படங்களில் நடித்தாலும் ரசிகர்கள் மத்தியில் இடம் பிடித்த நடிகர் தான் விஷால். இவரின் தந்தை ரெட்டி. இவர் ஆந்திராவில் மிகப்பெரிய தொழிலதிபராக உள்ளார்.
மாதவன்:
அன்று முதல் இன்று வரை மிகப் பெரிய பெண் ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டுள்ள நடிகர் தான் மாதவன். இவரின் தந்தை ரங்கநாதன்.
நடிகர் சந்தானம்:
தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக திகழ்ந்து கொண்டிருக்கும் நடிகர் சந்தானம் தற்போது படங்களில் ஹீரோவாக நடித்து வருகின்றார். இவரின் தந்தை நீலமேகம்.
விஷ்ணு விஷால்:
தமிழ் சினிமாவில் குறைந்த திரைப்படங்களில் நடித்த மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை கொண்ட நடிகர் தான் விஷ்ணு விஷால். இவரின் தந்தை ரமேஷ்.
ஸ்ரீகாந்த்:
தமிழ் சினிமாவில் ஒரு சில திரைப்படங்களில் நடித்தாலும் தனது அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் தான் ஸ்ரீகாந்த். இவரின் தந்தை கிருஷ்ணமாச்சாரி.
நடிகர் ஆர்யா:
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவரான ஆர்யா தற்போது சூப்பர் ஹிட் திரைப்படங்களை மக்களுக்கு கொடுத்து வருகிறார். இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான கேப்டன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இவரின் தந்தை உமர்.