அம்பானி வீட்டு திருமணத்தில் ஆட்டம் போடும் தல தோனி… இணையத்தில் வைரலாகும் வீடியோ…

இந்தியாலேயே  மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவர் தான் முகேஷ் அம்பானி. இவர்  Reliance Industries Ltd தலைவரும், நிர்வாக இயக்குனருமான இருந்து வருகிறார்.  முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கு தொழிலதிபர் வீரேன் மெர்ச்சண்ட்டின் மகள் ராதிகா மெர்ச்சன்ட்டுக்கும் ஜனவரி 2023 ல் மும்பையில் உள்ள அன்டாலியா இல்லத்தில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.இவர்களின் திருமணம் ஜூலை 12ம் தேதி மும்பையில் வைத்து நடைபெறும் என அறிவிக்க பட்டு இருந்தது.

   

இவர்களின் திருமணம் ஜூலை மூன்றாம் தேதி நடக்க உள்ளது. அதற்கு முன்பாக குஜராத் மாநிலத்தில் ஜாம் நகரில் மூன்று நாட்கள் திருமணத்திற்கு முந்தியே நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றனர். இதில் மார்க் ஜு க்கர்பர்க்,  சுந்தர் பிச்சை,  ரிஹானா  உள்ளிட்ட வெளிநாட்டு பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டுள்ளனர். இந்நிகழ்ச்சியில்   ஐபிஎல் நட்சத்திரங்களுக்கும் அதேபோல் பாலிவுட் சினிமா நட்சத்திரங்களுக்கும் அனைவரும் பங்கேற்று இருந்தனர்.

பிராவோ  இந்நிகழ்ச்சியில் எம் எஸ் தோனி மற்றும் அவரது நீண்ட கால நண்பரான பிராவோவுடன்  தாண்டிய ஆட்டத்தை உற்சாகமாக ஆடியுள்ளார். அவர் அருகே அவரது மனைவி சாக்ஷி மற்றும் பிராவோவின் மனைவியும்  தாண்டியா ஆடி இருக்கிறார்கள். தற்போது எம் எஸ் தோனி தாண்டிய  ஆடிய வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.