பாபி சிம்ஹாவால்.. சிக்கலில் பிரபல நகை கடன் நிறுவனம்.. என்ன செய்தார் தெரியுமா..?

நடிகர் பாபி சிம்ஹா கடந்த 2015 ஆம் வருடத்தில் வெளிவந்த உறுமீன் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமானார். அத்திரைப்படத்தில் தன்னுடன் இணைந்து நடித்த ரேஷ்மிகா மேனனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது இத்தம்பதிக்கு ஒரு மகளும் ஒரு மகனும் இருக்கிறார்கள்.

   

திருமணத்திற்கு பிறகு ரேஷ்மி மேனன் நடிப்பதை நிறுத்திக் கொண்டார். தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வரும் பாபி சிம்ஹா ஜிகர்தண்டா திரைப்படத்தில் வில்லனாக மிரட்டி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றார். இந்நிலையில், இரண்டு வருடங்களுக்கு முன்பு அவர் தயாரித்த திரைப்படம் ஒன்று சிக்கலில் மாட்டியிருப்பதாக வலைப்பேச்சு பிஸ்மி கூறியிருக்கிறார்.

அவர் தெரிவித்திருப்பதாவது, இரண்டு வருடங்களுக்கு முன்பு பாபி சிம்ஹா தடை உடை என்ற திரைப்படத்தை தயாரித்திருந்தார். அத்திரைப்படத்தில் தற்போது சீனியர் கதாநாயகி ஒருவர் நடித்து வருகிறார். ஆனால், அப்படம் குறித்த எந்த தகவலும் வெளிவரவில்லை. எனவே, எப்போது வெளியாகும் என்ற குழப்பத்தில் உள்ளது. பாபி சிம்ஹாவிற்கு கடன் கொடுத்த தங்க நகை கடன்  நிறுவனம் இதனால், நொந்து போயுள்ளது என்று பிஸ்மி தெரிவித்துள்ளார்.