
தளபதி விஜய் தற்போது இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். அத்திரைப்படத்திற்கான அப்டேட்டுகள் வெளிவந்து கொண்டிருக்கிறது. வழக்கமாக விஜய் ஒரு திரைப்படத்தின் பணிகள் 50% முடிந்துவிட்டால், தன் அடுத்த படத்திற்கான கதை மற்றும் இயக்குனரை தேர்ந்தெடுத்து விடுவார்.
ஆனால், தற்போது அவரின் அடுத்த படத்திற்கான எந்த தகவலும் வெளிவரவில்லை. இந்நிலையில், தளபதி விஜய்யின் 69 ஆவது திரைப்படம் தொடர்பான அப்டேட்டுகளை அவரின் ரசிகர்களே வெளியிட்டிருக்கிறார்கள்.
அதாவது சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பது போன்று தளபதி விஜய்யின் 69-ஆவது திரைப்படத்திற்கான போஸ்டரை வெளியிட்டு இணையத்தில் வைரலாக்கி வருகிறார்கள். அதனை உண்மை என்று நினைத்து பலரும் கேட்பதாக வலை பேச்சில் அந்தணன் கூறியிருக்கிறார்.