
தளபதி விஜய்க்கு கோடான கோடி ரசிகர்கள் இருப்பது அனைவரும் அறிந்த விஷயம் தான். அவர் எந்த மேடைகளில் ஏறினாலும் “என் நெஞ்சில் குடியிருக்கும்” என்று பேசத் தொடங்கும் போதே ரசிகர்கள் ஆரவாரம் செய்ய தொடங்கிவிடுவார்கள். அரங்கமே அதிரும் அளவிற்கு கரகோஷங்கள் எழும்.
இந்நிலையில், சமீப காலமாக தளபதி விஜய் அரசியலில் ஈடுபட போவதற்கான அறிகுறிகள் தெரிகிறது. அவர் மேடைகளில் மறைமுகமாக அரசியல் பேச்சுக்களை தான் அதிகம் பேசி வருகிறார். மேலும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு சமீபத்தில் நிவாரண பொருட்களும் வழங்கியிருந்தார்.
அப்போது அவர் எடுத்துக் கொண்ட புகைப்படங்களும், வீடியோக்களும் இணையதளங்களில் வைரலானது. இந்நிலையில், தன்னை காண வந்த ரசிகர்களுக்காக பேருந்து ஒன்றின் மீது ஏறி வந்து கையசைக்கிறார். அதனை பார்த்த ரசிகர்கள் மாலைகளை தூக்கி அவர் மேல் எரிந்து ஆரவாரம் செய்கிறார்கள். அந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.
#ThalapathyVijay ????
pic.twitter.com/nz5Ws4Zg2z— Aishwarya Suresh (@Aiish_suresh) January 11, 2024