சினிமாவில் நடித்து சொந்த வீடு இல்லாமல் வாடகை வீட்டில் வசித்து வரும் பிரபலங்கள் யார் தெரியுமா?…

தமிழ் சினிமாவின் வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரையில் நடிக்கும் நடிகைகள் அதிகமாக தொகை சம்பளமாக பெற்றாலும் இன்னும் வாடக வீட்டில் வசிக்கும் பிரபலங்களை பற்றி இதில் காணலாம்.

1.கவின்:

   

விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றவர் நடிகர் கவின். அதை தொடர்ந்து நீண்ட இடைவெளிக்குப் பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் போட்டியில் பங்கு பெற்றார்.அதன்  மூலம் ஏராளமான ரசிகர் பட்டாளத்தை பெற்றார். தற்போது நடிகர் கவின் தமிழ் சினிமாவின் கதாநாயகனாக வலம் வருகிறார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ‘டாடா’ இந்த படமானது பிளாக்பஸ்டர் ஹிட்டானது. இப்படத்திற்கு பின்னர் கவினுக்கான மார்க்கெட் உயர்ந்து அவர் சம்பளத்திலும் கோடியை நெருங்கி விட்டாலும், அவருக்கு இன்னும் சொந்த வீடு இல்லாமல் வாடகை வீட்டில் தான் வசித்து வருகிறார்.

2.கஞ்சா கருப்பு:

இயக்குனர் அமீர் இயக்கத்தில் வெளியான படம் ‘ராம்’. இப்படத்தில் நகைச்சுவை நடிகராக அறிமுகமானவர் நடிகர் கஞ்சா கருப்பு. இதைத் தொடர்ந்து பருத்திவீரன், தாமிரபரணி போன்ற பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார். அதன் பிறகு இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சிகள் போட்டியாளராக பங்கு பெற்றார். நடிகர் கஞ்சா கருப்பு டாக்டர் பெண்ணை  திருமணம் செய்து சொந்தமாக வீடு வாங்கி செட்டில் ஆனார். அதன் பின்னர் படம் தயாரிக்க ஆசைப்பட்டு நிறைய கடன் வாங்கி வீடு விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டார்.  தற்போது வாடகை வீட்டில் தான் வசித்து வருகிறார்.

Ganja Karuppu at the Appuchi Gramam Press Meet

3.மாரிமுத்து:

சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரன் கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகர் மாரிமுத்து. ஆனால் இவர் சினிமாவில் பல ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். இயக்குனர் வசஇயக்குனர் வசந்திடம் உதவி இயக்குனராக பணியாற்றினார். அதன்  பின்னர் 2008-ம் ஆண்டு வெளியான ‘கண்ணும் கண்ணும்’  என்ற படத்தை இயக்கினார் அந்த படம் எதிர்பார்த்த அளவிற்கு மக்கள் மத்தியில் வரவேற்பு பெறவில்லை. அதன் பிறகு சினிமாவில் சின்ன சின்ன வேடங்களில்  நடித்து வந்தார். தற்போது எதிர்நீச்சல் சீரியலில் நடித்து வருகிறார். இவர் வாடகை வீட்டில் வசித்து வருகிறார்.தற்போது இவர் சென்னையில் சொந்தமாக இடம் வாங்கி வீடு ஒன்றை கட்டி வருகிறார்.

4.பார்த்திபன்:

தமிழ் சினிமாவில் பல படங்களை இயக்கி பேமஸ் ஆனவர் இயக்குனர் பார்த்திபன். இவர் 30  ஆண்டுகளுக்கு மேல் படங்களை இயக்கி பல்வேறு விருதுகளை வென்றுள்ளார். இவர் இயக்குநர் மட்டுமல்ல தலைசிறந்த நடிகரும் கூட  பல்வேறு படங்களில் தன்னுடைய திருமறையை நிரூபித்திருக்கிறார். இப்படி பெயர் புகழோடு இருந்தாலும் தற்போது வரை வாடகை வீட்டில் தான் வசித்து வருகிறார்.

5. சகிலா:

மலையாள கவர்ச்சி படங்களின் நடித்த ஃபேமஸ் ஆனவர் நடிகை சகிலா.இதை  தொடர்ந்து இவர் தமிழிலும் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். அதன் பிறகு சினிமாவை விட்டு விலகி இருந்த சகிலா விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கு பெற்று மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றார். இவர் படம் நடித்தந்த காசையெல்லாம் வைத்திருந்தால் வருமான வரித்துறை ரெய்டு வந்துவிடும் எனக்கூறி அவரது உறவினர்கள் அவரிடம் இருந்த காசையெல்லாம் வாங்கி ஏமாற்றிவிட்டார்களாம். இதனால் சொந்தமாக வீடு எதுவும் இல்லாமல் தற்போது வரை வாடகை வீட்டில் வசித்து வருகிறார்.

6.விஜயலட்சுமி:

நடிகர் விஜய் நடிப்பில் வெளியான ‘பிரண்ட்ஸ்’ திரைப்படத்தில் விஜய்க்கு தங்கையாக நடித்த பிரபலமானவர்தான் நடிகை விஜயலட்சுமி. இதைத் தொடர்ந்து ஒரு சில படங்களில் நடித்த இவர் பின்னர் பெரிய அளவில் பட வாய்ப்பு கிடைக்கவில்லை .இதனிடையே நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் தன்னை காதலித்து ஏமாற்றி விட்டதாக கூறி பரபரப்பை ஏற்படுத்திய விஜயலட்சுமி தனக்கு ஒரு சொந்த வீட்டுக்குள்ள கூட இல்லை என ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.