நடிகை விஜி சந்திரசேகருக்கு இவ்வளவு அழகான மகள்களா?.. கொள்ளை கொள்ளும் அழகு.. லேட்டஸ்ட் குடும்ப புகைப்படங்கள்..

தென்னிந்திய சினிமாவில் 90களில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் தான் நடிகை விஜி சந்திரசேகர். திரைப்படங்களிலும் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ள இவர் நடிகை சரிதாவின் தங்கை.

   

பாலசந்தரின் இயக்கத்தில் வெளியான தில்லுமுல்லு என்ற திரைப்படத்தில் ரஜினிகாந்தின் தங்கையாக நடித்து தமிழ் சினிமா உலகில் அறிமுகமானார்.

அந்தத் திரைப்படத்தில் இவரின் நடிப்பு வெகுவாக பாராட்டப்பட்டது. நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகையாக திகழ்ந்தவர்.

இவர் தமிழில் மட்டுமல்லாமல் மலையாள மற்றும் தெலுங்கு உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இவர் கலியுகம், பார்த்தாலே பரவசம், கிழக்குச் சீமையிலே, படையப்பா, சமஸ்தானம், ஆயுத எழுத்து மற்றும் மதயானை கூட்டம் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

அதனைப் போலவே அலைகள், 30 கோடி முகங்கள், கந்தபுராணம், வாழப் பிறந்தவர்கள், ஜாதி மல்லி, குடும்பம் ஒரு கோவில் மற்றும் கோலங்கள் உள்ளிட்ட சின்னத்திரை நெடுந்தொடர்களிலும் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்று நடித்துள்ளார்.

இவருக்கு தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. இவர் கடந்த 2012 ஆம் ஆண்டு நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கிய ஆரோகணம் படத்தில் லீடு ரோலில் நடித்ததால் சில விருதுகளும் இவருக்கு கிடைத்தது.

இப்படி பல புகழுக்குரிய இவர் கேப்டன் சந்திரசேகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு சுரக்ஷா மற்றும் லவ்லின் என்ற இரண்டு பெண்கள் உள்ளனர்.

விஜி நடிப்பு துறையில் மட்டுமல்லாமல் வியாபாரத் துறையிலும் திகழ்ந்து கொண்டிருக்கிறார். இந்நிலையில் விஜய் சந்திரசேகரின் மகள் லவ்லின் சமீபத்தில் வெளியான அயலி திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த அசத்தியிருந்தார்.

அந்தத் திரைப்படத்தில் அவரின் நடிப்பு வெகுவாக பாராட்டப்பட்டது. இவருக்கு அடுத்தடுத்து தொடர்ந்து படங்களில் நடிக்கும் வாய்ப்பு குவிந்து வருகிறது.

இதனிடையே இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் லவ்லின் அடிக்கடி தனது க்யூட்டான புகைப்படங்களை பகிர்வது வழக்கம்.

அதன்படி தற்போது விஜி சந்திரசேகரின் இரண்டு மகள்களின் அழகிய புகைப்படங்களும் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

இதனைப் பார்த்து ரசிகர்கள் பலரும் விஜி சந்திரசேகருக்கு இவ்வளவு அழகான மகள்களா என கூறி புகைப்படத்தை வைரலாக்கி வருகிறார்கள்.