காதலித்து திருமணம் செய்து பாதியிலேயே விவாகரத்து செய்த சீரியல் பிரபலங்கள் யார் தெரியுமா?…

சின்னத்திரை சீரியல்களில் ஜோடியாக நடித்த நடிகர் மற்றும் நடிககைகள்  ரியல் லைஃப்பிலும்  காதலித்து திருமணம் செய்து கொண்டனர். அதன் பிறகு சிலர் விவாகரத்தும் செய்துள்ளனர்.  அப்படி விவாகரத்து  செய்தவர்களின் தொகுப்பை இதில் காண்போம்.

1.விஷ்ணுகாந்த் – சம்யுக்தா:

   

சிப்பிக்குள் முத்து என்ற சீரியலில் நடித்தவர்கள் நடிகை சம்யுக்தா மற்றும் நடிகர் விஷ்ணுகாந்த் இவர்கள் இருவரும்  காதலித்து மார்ச் மூன்றாம் தேதி திருமணம் செய்து கொண்டனர்.பின்னர் திருமணம் செய்துகொண்ட இவர்கள் திருமணமான ஒரே மாதத்தில் சண்டை ஏற்பட்டு பிரிந்துவிட்டனர்.தற்போது  இணையத்தில் ஒருவரைப் பற்றி ஒருவர் குற்றம் கூறி வருகின்றனர்.

2.ரச்சிதா – தினேஷ்:

சின்னத்திரை சீரியல்கள் மூலம் அறிமுகமாகிய காதலித்து திருமணம் செய்து கொண்டவர் நடிகர் தினேஷ் மற்றும் நடிகை .ரச்சிதா சில ஆண்டுகள் சந்தோசமாக வாழ்ந்த நிலையில் கருத்து வேறுபாட்டின் காரணமாக தற்போது தனித்தனியாக  வாழ்ந்து வருகின்றனர்.

3.திவ்யா ஸ்ரீதர் – அர்னவ்:

செவ்வந்தி சீரியல் கதாநாயகியாக நடிப்பவர் நடிகை திவ்யா. இவர்  சீரியல் நடிகரான அர்னவ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.  திவ்யா கர்ப்பமானதும் இவர்கள் இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது அர்னவ் தன்னை அடித்து கருவை கலைக்க முயற்சிப்பதாக கூறி பரபரப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். பின்னர் அர்னவ் கைது செய்யப்பட்டு தற்போது ஜாமீனில் வெளியே வந்துள்ளார். தற்போது குழந்தை பிறந்த பின்னரும் இருவருக்கும் இடையேயான சண்டை ஓய்ந்தபாடில்லை.

4.விக்னேஷ் – ஹரிப்பிரியா:

எதிர்நீச்சல்  சீரியல் நடிகை ஹரிப்பிரியா,விக்னேஷ் என்கின்ற சீரியல் நடிகரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சில ஆண்டுகள் மட்டுமே சேர்ந்து வாழ்ந்தனர்.அதன் பிறகு  கருத்து வேறுபாட்டின் காரணமாக விவாகரத்து செய்து பிரிந்து விட்டனர்.

5.ஜெயஸ்ரீ – ஈஸ்வர்:

சீரியல் நடிகையான ஜெயஸ்ரீ சீரியல் நடிகர் ஈஸ்வரி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர் மகாலட்சுமி உடன் தனது கணவர் தொடர்பில் உள்ளதாக மிகப்பெரிய சர்ச்சையை எழுப்பி விவாகரத்து செய்தார்.