மோசமான பிரச்சனையால் பாதிக்கப்பட்ட நடிகை சமந்தா… தற்காலிகமாக சினிமாவை விட்டு விலகுகிறாரா?… சோகத்தில் ரசிகர்கள்…

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை சமந்தா. இவர் நடிப்பில் வெளிவந்த பல படங்கள் சூப்பர் சூப்பர் ஹிட் ஆகியது. சினிமாவின் உச்சத்தில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் போதே நடிகர் நாகசைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தற்போது இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர் என்பது நாம் அனைவரும் அறிந்ததே.

   

இதை தொடர்ந்து தனது கெரியரில் கவனம் செலுத்த தொடங்கி, ஆக்டிவாக நடித்துக் கொண்டிருந்தார் நடிகை சமந்தா . ஆனால் திடீரென இவர் மயோசிட்டிஸ் எனும் அரிய வகை தோல் நோயால் பாதிக்கப்பட்டு அதற்கான சிகிச்சை பெறத் தொடங்கினார். இதைத்தொடர்ந்து தற்பொழுது அதற்கான சிகிச்சை பெற்று குணமடைந்து மீண்டும் படங்களில் கமிட்டாகி பிஸியாக நடித்து வருகிறார்.

இவர் நடிப்பில் இறுதியாக வெளிவந்த சகுந்தலம் திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது. இதைதொடர்ந்து விஜய் தேவர் கொண்டாவுடன் இணைந்து குஷி திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படத்தின் ரிலீசை எதிர்பார்த்து ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

இந்த வேலையில் தற்பொழுது மீண்டும் ஒரு தகவல் இணையத்தில் கிசுக்கப்பட்டு வருகிறது. அதாவது நடிகை சமந்தா தற்காலிகமாக சினிமாவை விட்டு விலகப் போவதாகவும், இதற்காக அவர் தான் நடிக்க ஒப்பந்தமாக படங்களில் வாங்கிய அட்வான்ஸ் திருப்பி தந்ததாகவும் இணையத்தில்  கிசுகிசுக்கப்பட்டு வருகிறது. ஆனால் இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என்பது நமக்கு தெரியவில்லை.