வில்லன் இல்லாமல் சூப்பர் ஹிட் கொடுத்த விஜய் படங்கள் என்னன்னு தெரியுமா?… 

தமிழ் சினிமாவில் வெளியாகும் படங்கள் ஏராளம் அதிலும் வில்லன் இல்லாமல் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான திரைப்படங்களைப் பற்றி இதில் காண்போம்.

1.குஷி:
இயக்குனர் எஸ் ஜே சூர்யா இயக்கத்தில் 2001 ஆம் ஆண்டு வெளியான படம் ‘குஷி’. இப்படத்தில் விஜய், ஜோதிகா போன்ற பல பிரபலங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர். இப்படத்தில் முழுவதும் காதலை மையப்படுத்தி எடுக்கப்பட்ட திரைப்படமாகும். காதலால்  காதலர்களுக்குள் ஏற்படும் சின்ன சின்ன பிரச்சனை எப்படி எதிர்கொள்வது என்பதை பற்றிய ஒரு திரைப்படமாக இத்திரைப்படம் அமைந்துள்ளது.  இந்த திரைப்படம் வில்லன் என்னும் கதாபாத்திரம் ஒன்று இல்லாமலேயே இப்படத்தில் இயக்கியுள்ளார் எஸ் ஜே சூர்யா அவர்கள்.

   

2.பிரண்ட்ஷிப்:

இயக்குனர் சித்திக் இயக்கத்தில் 2001 ஆம் ஆண்டு வெளியான படம் ‘பிரண்ட்ஷிப்’. இந்த படத்தில் விஜய், சூர்யா, தேவயானி, வடிவேலு, மதன்பாபு, சார்லி போன்ற பல பிரபலங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர்.இந்த திரைப்படம் மூன்று நண்பர்களின் கதை அம்சம் கொண்ட ஒரு திரைப்படம் ஆகும். இந்த திரைப்படத்திலும் வில்லன்களே இல்லாமல் எடுக்கப்பட்ட ஒரு திரைப்படம் இருந்தாலும் இது மாபெரும் வெற்றி படமாக அமைந்தது.

3.காதலுக்கு மரியாதை:

இயக்குனர் ஃபாசில் இயக்கத்தில் 1997 ஆம் ஆண்டு வெளியான படம் ‘காதலுக்கு மரியாதை’ இந்த திரைப்படத்தில் விஜய், ஷாலினி, ராதாரவி, சிவகுமார், ராதிகா, சார்லி போன்ற பல பிரபலங்களை இப்படத்தில் நடித்துள்ளனர். இப்படம் முழுவதுமாக காதலை மையப்படுத்தி எடுக்கப்பட்ட ஒரு திரைப்படமாகும். இந்த திரைப்படத்தின்  கதை குடும்பத்திற்காக தங்களின் காதலை தியாகம் செய்யும் இரு காதலர்கள் பற்றிய ஒரு திரைப்படமாக இப்படம் அமைந்துள்ளது.

4.துள்ளாத மனமும் துள்ளும்:

எழில் இயக்கத்தில் 1999 ஆம் ஆண்டு வெளியான படம் ‘துள்ளாத மனமும் துள்ளும்’ இப்படத்தில் விஜய், சிம்ரன், வையாபுரி, பொன்னம்பலம் , மதன் பாப் போன்ற பல பிரபலங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் காதலை மையப்படுத்தி எடுக்கப்பட்ட திரைப்படம் ஆகும். இந்த திரைப்படத்தின் கதை என்னவென்றால் நடிகை சிம்ரன் அவர்கள் ஆரம்பத்தில் விஜயை தவறாக புரிந்து கொள்வார் பிறகு கண் பார்வை இழந்து குட்டி எனும் இந்த விஜய்யை காதல் செய்வார். ஆனால் கண் பார்வை கிடைத்த பிறகு தான் தெரிந்தது ஆரம்பத்தில் தான் வெறுத்த விஜய் தான் குட்டி என்பதை உணர்ந்து இருவரும் ஒன்று சேர்வார்கள். இந்த படத்தில் வில்லன்களே இல்லாத நிலையிலும் மாபெரும் வெற்றி படமாக அமைந்தது.

5.பூவே உனக்காக:

இயக்குனர் விக்ரமன் இயக்கத்தில் இரண்டு 1996 ஆம் ஆண்டு வெளியான படம் ‘பூவே உனக்காக’. இப்படத்தில் விஜய், சங்கீதா, முரளி போன்ற பல பிரபலங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தில் தனது காதலியை கரம்பிடிப்பதற்காக காதலியின் வீட்டில் வேலை பார்க்கும் கதாபாத்திரத்தில் ஏற்று நடித்திருந்தார். காமெடி கலந்த இந்த திரைப்படமும் மாபெரும் வெற்றி படமாக தமிழ் சினிமாவில் அமைந்தது இந்த படத்திலும் வில்லன்களே இல்லாத நிலையில் மாபெரும் மெகா ஹிட் திரைப்படமாக அமைந்தது.