
சமீபகாலமாகவே பிரபலங்களின் சிறுவயது புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது அந்தவகையில் தற்பொழுது நடிகர் ஷாருக்கானின் சிறுவயது புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது. பாலிவுட் திரையுலகின் பாட்ஷாவாக வலம் வருபவர் நடிகர் ஷாருக்கான்.
ஜீரோ படத்தின் தோல்விக்கு பின்னர் அவர் நடிப்பில் ஐந்து ஆண்டுகளாக எந்த திரைப்படமும் ரிலீஸ் ஆகாமல் இருந்த நிலையில், கடந்த ஜனவரி மாதம் பதான் என்கிற அதிரடி ஆக்ஷன் திரைப்படத்தின் மூலம் மாஸான கம்பேக் கொடுத்தார் ஷாருக்கான். பான் இந்தியா படமாக ரிலீஸ் ஆன இது பாக்ஸ் ஆபிஸில் ஆயிரம் கோடிக்கு மேல் வசூலித்து மாபெரும் சாதனை படைத்தது.
இந்திய அளவில் இந்த ஆண்டு ரிலீசான படங்களில் அதிக வசூல் குவித்த படம் என்கிற பெருமையையும் பதான் பெற்றுள்ளது. பதான் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பின்னர், ஷாருக்கான் தற்பொழுது ஜவான் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இயக்குனர் அட்லீ ஜவான் படத்தை இயக்கியுள்ளார். இதில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். அனிருத் தான் இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார். இந்தியில் உருவாகியுள்ள இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளிலும் டப்பிங் செய்து வெளியிடப்பட உள்ளது. தற்பொழுது நடிகர் ஷாருக்கானின் சிறுவயது புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.