
நடிகர்கள் மேடையில் செய்யும் சின்ன விஷயம் கூட பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தும் நிலையில், தற்போது படத்தின் ப்ரோமோஷனுக்காக மேடையில் சேலையை இழுத்து நடனம் ஆடிய நடிகர் மற்றும் நடிகை இருவரும் சர்ச்சையில் சிக்கி இருக்கின்றனர்.
தற்போது வெளியான கேங்ஸ் ஆஃப் கோதாவரி என்ற படத்தில் தெலுங்கு நடிகர் விஸ்வக் சென் நடித்து இருக்கிறார். மேலும் இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து இருக்கிறார்.
சேலையை இழுத்து டான்ஸ்
சமீபத்தில் இந்த படத்தின் ப்ரீ ரிலீஸ் விழா நடந்த போது, அதில் நடிகர் விஷ்வக் சென் மற்றும் நடிகை நேஹா ஷெட்டி ஆகியோர் நடனம் ஆடினார்கள்.
அப்போது நடிகையின் சேலையை பிடித்து இழுத்து விஷ்வக் சென் ஆடிய நடனம் வீடியோ தற்போது வைரலாகி இருக்கிறது. இவ்வாறு சேலையை இழுத்து ஆடியது முகம் சுளிக்க வைப்பதாக உள்ளது என பலரும் தற்போது அவர்களுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். வீடியோ இதோ,