
விஜய்யின் லியோ
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மாஸ்டர் படத்தை தொடர்ந்து நடிகர் விஜய்யை வைத்து லியோ என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்திற்கான படப்பிடிப்பு காஷ்மீரில் தொடங்கி சென்னையில் நடந்து வந்த நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன் படப்பிடிப்பு முடிந்து விட்டது.
இப்போது போஸ்ட் புரொடக்ஷன் நடந்து வருகிறது. இந்த படத்தில் விஜய் மற்றும் த்ரிஷா பல ஆண்டுகளுக்கு பின் இணைந்து நடித்து வருகிறார்கள். மேலும் இப்படத்தில் சஞ்சய் தத், அர்ஜுன், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் மேனன் ஆகியோர் நடித்துள்ளனர்.
இவர்களைத் தொடர்ந்து முக்கிய ரோலில் பிரியா ஆனந்த், சாண்டி மாஸ்டர், மேத்யூ தாமஸ், கதிர், மடோனா செபஸ்டின், ஜனனி போன்ற நடிகர்களும் நடித்துள்ளதாக கூறப்படுகிறது.
ஆடியோ வெளியீடு
இந்நிலையில் விஜய் லியோ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா தமிழகத்தை நடக்கவில்லை என்றும், மலேசியாவில், வரும் அக்டோபர் 5ம் தேதி, இந்த நிகழ்ச்சி நடைபெற இருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வருகிறது. ஆனால் இந்த ஆடியோ வெளியீட்டு விழா பற்றிய தகவல் உண்மையா என்பதும் தெரியவில்லை.