”இதுதாங்க குறைந்த பட்ஜெட் செண்டை மேளம்”…. இணையத்தை கலக்கும் சிறுவர்களின் வைரல் வீடியோ…

சமூக வலைத்தளங்களில் சில வீடியோக்கள் திடீரென்று வெளியாகி வைரல் ஆகுவது வழக்கம். அந்த வகையில் தற்பொழுது சிறுவர்கள் சிலர் இணைந்து குடத்தை கழுத்தில் மாட்டிக் கொண்டு செண்டை மேளம் இசைக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

   

தமிழக கோயில்கள், திருவிழாக்கள் வீடுகளில் நடக்கும் மங்கள நிகழ்சிகள் போன்றவற்றிற்கு தவில், நாதஸ்வரம் கொண்டு நீண்ட இசையுடன் வரவேற்பது பாரம்பரியமாக தமிழகத்தில் கடைபிடிக்கப்படும் ஒரு வழக்கம். தமிழகத்தை போல கேரள கோயில்களில் தோல் கருவியான செண்டை மேளம் இசைக்கப்பட்டு வருகிறது.

கேரள மாநிலம் திருச்சூரில் பூரம் விழாவில் மாநிலம் முழுவதும் உள்ள செண்டை மேள கலைஞர்கள் ஒரே இடத்தில் கூடி இசைக்கருவிகளை இசைப்பதை ரசிக்க பல மாநில மக்கள் அங்கே கூடுகின்றனர். செண்டை மேளங்கள் அதிர்வு இசை அனைவரின் கவனத்தையும் கவரும் வகையில் இருக்கும். தமிழ்நாட்டில் தவில் நாதஸ்வரம் எப்படி பிரபலமோ அதுபோல கேரளாவில்  செண்டை மேளம் பிரபலம் என்றே கூறலாம்.

தற்பொழுது தமிழகத்திலும் செண்டை மேளத்திற்கு நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. திருமணம், திருவிழா மற்ற விழாக்களிலும் தற்பொழுது செண்டை மேளம் இசைக்கப்படுகிறது. தற்பொழுது இந்த வீடியோவில் சிறுவர்கள் சிலர் சேர்ந்து புது முயற்சியாக குடத்தை கழுத்தில் மாட்டிக் கொண்டு செண்டை மேளம் இசைக்கின்றனர். இந்த வீடியோ பல மில்லியன் வியூஷ்களை கடந்து வைரலாகி வருகிறது. இதோ இந்த வைரல் வீடியோ….