
நடிகர் வடிவேலு தன் நகைச்சுவை திறனால் ஒட்டுமொத்த மக்களையும் கட்டி போட்டவர். இன்று வரை எந்த சூழ்நிலையாக அதற்கு கச்சிதமாக பொருந்திவிடும் அவரின் முக பாவனைகள். அந்த வகையில் அவர் இல்லாத மீம்ஸ்களே கிடையாது என்று கூறலாம்.
இந்த அளவிற்கு தன் நகைச்சுவையால் மக்கள் மனங்களில் இடம் பிடித்த அவர், ஒரு மனிதராக சக மனிதர்களுக்கு மரியாதை அளிப்பதில்லை என்றும் தன்னுடன் நடித்த நடிகர்களுக்கு எந்த உதவியும் செய்வதில்லை என்றும் பல குற்றச்சாட்டுகள் வைக்கப்படுகிறது.
அது மட்டுமல்லாமல் சமீபத்தில் மறைந்த கேப்டன் விஜயகாந்த் அவர்களின் இறப்பிற்கு கூட அவர் செல்லவில்லை. மனிதர்கள் என்றால் சண்டை சச்சரவுகள் வரத்தான் செய்யும், அதற்காக இறுதி சடங்கில் கூட பங்கேற்காமல் இருப்பது என்ன மாதிரியான எண்ணம்? என்று ரசிகர்களும் திரை பிரபலங்களும் அவரை திட்டி தீர்த்து வருகிறார்கள்.
மேலும் அவருடன் நடித்த சக கலைஞர்களும், அவரின் உண்மை முகத்தை பேட்டிகளில் வெளிக்கொண்டு வருகிறார்கள். இந்நிலையில் பழைய நிகழ்ச்சி ஒன்றில் வடிவேலு, நடிகர் அஜித்குமார் கால் மேல் கால் போட்டு அமர்ந்து பேட்டி அளிப்பதை பயங்கரமாக கலாய்த்திருக்கிறார்.
சிலர் ஆங்கிலத்தில் பேசிக்கொண்டு கால் மேல் கால் போட்டு கொண்டு அமர்ந்திருப்பார்கள். பலருக்கும் இங்கு ஆங்கிலம் தெரியாது. நானே கொழுப்பை பாரு என்று திட்டி இருக்கிறேன். ஆனால் அவரின் பெயரை கூற விரும்பவில்லை என்று மறைமுகமாக அஜித்குமாரை கலாய்த்திருக்கிறார். அந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்து ரசிகர்கள் வடிவேல் கண்டபடி திட்டி வருகிறார்கள்.
View this post on Instagram