இலங்கையில மட்டும் விஜய் காலை வைக்கட்டும்… அப்போ தான் தெரியும்… கடும் கோபத்தில் ஈழத்தமிழர்கள்….!

தளபதி விஜய் தற்போது கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். அத்திரைப்படத்திற்கான கிளைமாக்ஸ் காட்சி இலங்கையில் படமாக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது. ஆனால் விஜய் இலங்கைக்கு சென்றால், சில அமைப்பினர் அவருக்கு கடும் எதிர்ப்பு தெரிவிப்பார்கள் என்று கூறப்பட்டது.

   

இது குறித்து வலைப்பேச்சு அந்தணன் பேட்டி ஒன்றில் தெரிவித்திருப்பதாவது, தென்னிந்திய நடிகர் சங்கத்தில், ஈழத்தமிழர்களுக்கு ஆதரவான போராட்டம் முன்பு நடந்தது. அந்த சமயத்தில் வளர்ந்து வரும் நடிகராக இருந்த விஜய் உணர்ச்சிவசப்பட்டு இலங்கை என்ற ஒரு நாடே உலக வரைபடத்திலிருந்து இல்லாமல் போய்விடும் என்று பேசிவிட்டார்.

அதனை சிங்கள மொழியில் மொழிபெயர்த்து வீடியோக்கள் அதிகம் பகிரப்பட்டது. எனவே, அவருக்கு அங்கு கடுமையான எதிர்ப்பு இருக்கும் என்று கூறி இருக்கிறார். ஆனால் அது எந்த அளவில் இருக்கும் என்பது அவர் அங்கு சென்றால் தான் தெரியவரும் என்றும் தெரிவித்திருக்கிறார்.