இமான் பிரச்சனையை கேட்கக்கூடாது… சூடத்தில் சத்தியம் வாங்கிய சிவகார்த்திகேயன்… வெளிவந்த ரகசியம்…!

இசையமைப்பாளர் டி இமான் மற்றும் நடிகர் சிவகார்த்திகேயன் இருவருக்கும் இடையேயான பிரச்சனை இணையதளங்களில் சர்ச்சையாக வெடித்து பரபரப்பாக பேசப்பட்டது. ஆனால் அதன் பிறகு சிவகார்த்திகேயனின் அயலான் திரைப்படம் தொடர்பான பிரமோஷன்களில் சிவகார்த்திகேயன் ஈடுபட்ட போதும், பேட்டிகளில் பங்கேற்றபோதும் டி.இமான் பிரச்சனை குறித்து யாரும் பேசவில்லை.

   

இதுகுறித்து வலைப்பேச்சு பிஸ்மி பேட்டி ஒன்றில் தெரிவித்திருப்பதாவது, அயலான் திரைப்படத்திற்கான பிரமோஷனுக்காக சிவகார்த்திகேயன் கலந்து கொண்ட பேட்டிகளில், டி.இமான் பிரச்சனை குறித்து எந்த ஒரு கேள்வியும் எழுப்பப்படவில்லை. இதை பார்த்த ரசிகர்கள் அப்படி ஒரு பிரச்சினையே இல்லை போல என்று நினைத்துக் கொண்டனர்.

அதற்கு காரணம் என்னவென்றால், சிவகார்த்திகேயன் தான் கலந்து கொள்ளும் பேட்டிகளில் முன்னதாகவே, தொகுப்பாளர்களிடம் டி. இமான் பிரச்சனை குறித்து எந்தவித கேள்வியும் கேட்க கூடாது என்று சூடத்தில் அடித்து சத்தியம் வாங்கிய பின்பே பேட்டிகளில் பங்கேற்றதாக வலைப்பேச்சு பிஸ்மி தெரிவித்திருக்கிறார்.