
தளபதி விஜய் தேர்தலில் களமிறங்கப் போவதாக இதற்கு முன்பே பல வதந்திகளும் தகவல்களும் அடிக்கடி பரவிக் கொண்டு தான் இருந்தது. அவரின் திரைப்படங்களில் வரும் வசனங்கள், இசை வெளியீட்டு விழாக்களில் அவர் பேசும் கருத்துக்கள் அனைத்துமே மறைமுகமாக அரசியல் சார்ந்ததாக இருக்கும்.
இந்நிலையில், சமீப நாட்களாக விஜய்யின் செயல்பாடுகள் அரசியலுக்கு அவர் வரப்போவதை ஓரளவிற்கு உறுதிப்படுத்தியது. இந்நிலையில், தற்போது அவரே அதிகாரப்பூர்வமாக தன் எக்ஸ் தள பக்கத்தில் அரசியலில் களமிறங்கிவிட்டதை உறுதி செய்து விட்டார்.
அந்த வகையில் தமிழக வெற்றி கழகம் என்று தன் கட்சிக்கு பெயர் வைத்திருப்பதாகவும், அதனை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ததாகவும் குறிப்பிட்டிருக்கிறார். மேலும், முழுமையாக மக்கள் சேவைக்காக அரசியலில் ஈடுபட போகிறேன். அதுவே தமிழ்நாட்டு மக்களுக்கு நான் செய்யும் நன்றி கடன் என்று கருதுகிறேன் என்று அறிக்கை வெளியிட்டுள்ளார். அறிக்கையை பார்த்த ரசிகர்கள் உச்சகட்ட மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.
#தமிழகவெற்றிகழகம் #TVKVijay https://t.co/Szf7Kdnyvr
— Vijay (@actorvijay) February 2, 2024