
கேப்டன் விஜயகாந்த் நேற்று காலை உடல்நலக்குறைவு காரணமாக மரணமடைந்த நிலையில், அவரின் உடலுக்கு திரையுலகை சேர்ந்த பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்கள். அந்த வகையில், தான் திரைத்துறையில் வளர்ந்து வர மிக முக்கிய காரணமாக இருந்த விஜயகாந்திற்கு, அஞ்சலி செலுத்த தளபதி விஜய்யும் வந்திருந்தார்.
மக்கள் வெள்ளத்தில் சிக்கி வந்த அவர், விஜயகாந்தின் உடலை பார்த்து சிறிது நேரம் அருகில் நின்று கண்கலங்கி அழுதார். பொதுவாக விஜய் வெளியிடங்களில் உணர்ச்சிகளை காண்பிக்க மாட்டார். உணர்ச்சி பொங்க அவர் கேப்டன் விஜயகாந்தின் உடலை பார்த்தவாறு நின்று விட்டார். அருகில் இருந்த பிரேமலதாவிற்கும், அவரின் மகன்களுக்கும் ஆறுதல் கூறி தேற்றினார். அதன் பிறகு, அவர் அங்கிருந்து சென்று விட்டார்.
இந்நிலையில், விஜய் அஞ்சலி செலுத்திவிட்டு செல்லும் போது அவர் மீது செருப்பு வீசப்பட்ட வீடியோ இணையதளங்களில் வைரலாகி கொண்டிருக்கிறது. அது மட்டுமல்லாமல், கூட்டத்திலிருந்து சில பேர் போடா, வெளியே என்று கத்தினர். அந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள், அப்படி செருப்பை தூக்கி அவர் மேல் எரியும் அளவிற்கு அவர் என்ன செய்துவிட்டார்? என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள்.