
நடிகர் விஜய் சேதுபதி சமீபத்தில் அளித்த பேட்டியில் நடிகர் விஜய் உடன் நடித்த மாஸ்டர் திரைப்படம் குறித்து மனம் திறந்துள்ளார். அவர் பேசியிருப்பதாவது, நானாக சில இடங்களில் வசனங்களை பேச விரும்பினேன். எனினும் அப்படி பேசினால், அதை விஜய் சார் எப்படி எடுத்துக் கொள்வாரோ? என்று நினைத்தேன்.
சார் உங்களுக்கு தொந்தரவாக இருக்காதே என்று கேட்டேன். அதற்கு, அவர் நண்பா நீங்கள் எதை வேண்டுமானாலும் பேசுங்கள். அது ரொம்ப முக்கியமானது என்று கூறினார். மேலும் நான் செய்த சேட்டைகளை ரசித்தார். அதனால், எனக்கு நம்பிக்கை அதிகமானது. லோகேஷ் எனக்கு தம்பி மாதிரி எல்லோரும் சேர்ந்து அமைந்தது படம் சிறப்பாக வந்தது.
நான் சோப்பு வைத்து தலையில் கொம்பு வைத்திருப்பது போல் ஒரு காட்சி வரும். அதனை பார்த்து விஜய் விழுந்து விழுந்து சிரித்தார். கைதட்டி கொண்டாடினார். என் நடிப்பை ரசித்து பார்த்தார். அவர் நினைத்திருந்தால் நான் நடித்திருந்த பல காட்சிகளை எடுத்திருக்க முடியும். நன்றாக இருக்கிறது. அவர் நன்றாக நடித்திருக்கிறார் என்று கூறியது அவரின் பெருந்தன்மை என தெரிவித்துள்ளார்.