
தளபதி விஜய் நடிகராக மட்டுமல்லாமல் சிறப்பாக நடனம் ஆடியும், பாடல்கள் பாடியும் பல திரைப்படங்களில் பட்டையை கிளப்பி இருக்கிறார். அவரின் குரலில் வெளியாகும் பாடல்கள் அனைத்தும் பட்டி தொட்டி எங்கும் பிரபலமாகிவிடும். அதற்கு மிக முக்கிய காரணம் அவரின் தாயார் சோபனா பாடகி ஆவார்.
எனவே, விஜய்யும் ஆரம்ப காலத்தில் இருந்தே பல திரைப்படங்களில் அட்டகாசமாக பல பாடல்களை பாடியுள்ளார். அவரின் குரலில் வெளியாகும் பாடல்களுக்கு தனி ரசிகர் கூட்டமே இருக்கிறது. இந்நிலையில், வலைப்பேச்சு பிஸ்மி, தற்போது விஜய் நடித்து வரும் கோட் திரைப்படத்திலும் அவர் அருமையான பாடல் ஒன்றை பாடி இருப்பதாக தெரிவித்துள்ளார்.
இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையில் விஜய் பாடிய அந்த பாடல் நிச்சயம் பெரிய அளவில் வெற்றி பெறும் என்று கூறியுள்ளார். விஜய் அந்த பாடலை பாடுவதற்கு நான்கு மணி நேரங்கள் எடுத்துக் கொண்டதாகவும் பிஸ்மி கூறி இருக்கிறார். அதாவது, லியோ திரைப்படத்தில் பாடுவதற்கு விஜய் ஒரு மணிநேரம் தான் எடுத்துக்கொண்டாராம்.