பகல் கொள்ளையா இருக்கே…! தன் மனைவி பெயரில் விஜய் கட்டிய மண்டபம்… வாடகையை கேட்டால் வாயடைச்சிருவீங்க…!

தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக பல கோடி ரூபாய் சம்பளம் பெற்று வந்த தளபதி தற்போது அரசியலில் களமிறங்கி விட்டார். அவர் ஒரு திரைப்படத்திற்கு 200 கோடி ரூபாய் சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது. மேலும் அவர் திரைத்துறையை தாண்டி ஷேர் மார்க்கெட், ஓட்டல் மற்றும் ரெஸ்டாரண்ட் போன்றவையும் நடத்தி வருகிறார்.

   

மேலும், தன் அம்மா ஷோபா மற்றும் மனைவி சங்கீதா பெயர்களில் திருமணம் மண்டபங்களும் கட்டி நடத்திவருகிறார். அவரின் மனைவி பெயரில் உள்ள மண்டபத்திற்கு அரை நாள் வாடகை மட்டும் சுமார் 90 ஆயிரம் ரூபாய். முழு நேர வாடகை ரெண்டு லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் என்று கூறப்பட்டுள்ளது.

அந்த மண்டபத்தில் சுமார் 1500 நபர்கள் வரை அமர இடம் இருக்கிறது. எனினும், நேரில் சென்று மட்டுமே இந்த மண்டபத்திற்கு புக்கிங் செய்ய முடியும். இணைய வழியில் புக்கிங் செய்ய முடியாது என்று கூறப்பட்டிருக்கிறது. அது மட்டுமல்லாமல், அந்த மண்டபத்திற்கு விதிக்கப்படும் 18% ஜிஎஸ்டி வரியும் வாடிக்கையாளர்கள் தான் கட்ட வேண்டும் என்று கூறப்பட்டிருக்கிறது.