
விஜே மகேஸ்வரி
விஜய் டிவி, ஜீ தமிழ் போன்ற சேனலில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய விஜே மகேஸ்வரி, விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமானார். கணவரை பிரிந்து தனது மகனை சிங்கிள் மதராக வளர்த்து வரும் மகேஸ்வரி, விக்ரம் படத்தில் விஜய் சேதுபதியின் 3 மனைவிகளுள் ஒருவராக நடித்துள்ளார்.
தற்போது இவர் இயக்குனர் அரவிந்த் இயக்கத்தில், நடிகர் மஹத் நடிப்பில் உருவாகியுள்ள காதல் கண்டிசன்ஸ் அப்ளை படத்தில் நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் சானா கான், நிதின் சத்யா, திவ்ய தர்ஷினி, பிக்பாஸ் அபிஷேக், விவேக் பிரசன்னா போன்ற பல பிரபலங்கள் நடித்துள்ளனர்.
இந்த படத்தில் அபிஷேக் மற்றும் விஜே மகேஸ்வரி இடையே முத்த காட்சி இடம் பெற்றுள்ளதாக படத்தின் ரவீந்தர் குறிப்பிட்ட நிலையில், பேட்டி ஒன்றில் பேசிய அபிஷேக் கூறியதாவது, “ பல பேர் முன்னிலையில் செட்டில் முத்த காட்சியில் நடிக்க வேண்டும் என்று கூறியதும் முதலில் நான் தயங்கினேன் என்றார். ஆனால் விஜே மகேஸ்வரி மிகவும் போல்டாக வந்து வெறும் நடிப்பு தானே என்று கூறினார். பின்பு நான் நடித்தேன். இவ்வாறு அபிஷேக் கூறியுள்ளார்.