கண்ணீர் விட்டு கதறும் ‘குக் வித் கோமாளி’ பிரபலங்கள் நடந்தது என்ன?.. வெளியான வீடியோ…

இன்றைய காலகட்டத்தில் சின்ன திரையில் ஒளிபரப்பாகு ரியாலிட்டி  ஷோக்களுக்கு என்று மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு உள்ளது. அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களுக்கு என்று ஒரு ரசீகர் பட்டாளமே உள்ளது .

   

அப்படி விஜய் டிவியில் சூப்பர் ஹிட் ஒளிபரப்பாகும் நிகழ்வுகளில் ஒன்று’ குக் வித் கோமாளி’ தற்போது  ‘குக் வித் கோமாளி சீசன்4’ நடைபெற்று வருகிறது. இதில் மைன் கோபி, விசித்ரா, சிவாங்கி கிருஷ்ணகுமார் , டி ஆர் கே கிரண் , ராஜேஷ்,  ராஜ் அய்யப்பா, கிஷோர் குமார் போன்ற பல பிரபலங்கள் இப்போட்டியில்  போட்டியாளராக கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் புகழ், சுனிதா, ஜி பி முத்து, முஹம்மது குரைஷி,  மோனிஷா,  தங்கதுரை  போன்றோர்  கோமாளியாக இதில் கலக்கி வருகின்றனர்.  தற்போது இந்நிகழ்ச்சியில் டாப் 6 இறுதிப் போட்டியாளர்களை தேர்ந்தெடுத்துள்ளனர் இறுதி கட்டத்தை நெருக்கியுள்ளது. தற்போது இந்த வாரம் கிராண்ட் பினாலே ஐந்து மணி நேரம் ஒளிபரப்பாக உள்ளது.

தற்போது PROMO வீடியோவானது யூட்யூபில் வெளியாகியுள்ளது. அந்த ப்ரோமோவில்’ குக் வித் கோமாளி சீசன் 4′ முடிய உள்ளதை எண்ணி CHEF  தாமு, சிவாங்கி, ஆண்ட்ரியன்,  மோனிஷா போன்றோர்  கண்கலங்கி தன் வருத்தத்தை தெரிவிக்கும் விதமாக இந்த PROMO  வெளியிடப்பட்டுள்ளது. தற்போது இந்த PROMO  இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.